மள்ளர் யார்?
தமிழிகத்தை ஆட்சி செய்த சேர,சோழ,பாண்டிய தமிழ் மூவேந்தர்களாகிய மன்னர்,மருத நில மக்கள்,இவர்களின் தெய்வம் வேந்தன்.வேந்தன் பின்னாளில் தேவேந்திரன்,இந்திரன்,புரந்தன்,தேவர் வேந்தன் என அழங்கப்பட்டார்.இதனால் இம்மரபினா தம்மை தேவேந்திர குலத்தார் என்பர்.ஈகை மற்றும் கொடைப் பண்பு காரணமாக வேளாளர் என்றும்,வெள்ளத்தை அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்கள் என்று அறியபடுவர்.
மள்ளர் உழவர் மட்டுமன்று, போர் மறவரும்
ஆவர் இதன் காரணமாகவே “ஏரும் போரும் இணைபிரியாது” என்ற முதுமொழி வழக்கில் வந்தது.சங்க இலக்கியங்களில் மறக்குலம் என்று போற்றபடுபவர்கள் மள்ளர்களே.
பண்டைய காலத்தில் ஆட்சி எப்படி இருந்தது?
மன்னர்கள் மருத நிலத்து மக்களிடையே தோன்றினார்கள்.அவர்களே ஊர்கள் அமைத்து வாழ்ந்து கோட்டைச் சுவர்கள் எழுப்பி, தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.அரசிற்தான வருமானம் மருத நிலத்து வேளாண் மக்களிடமிருந்தே வந்தது.மருத நிலத்து மக்களிடமிருந்தும் மன்னன், அமைச்சர்கள், படைத்தளபதிகள்,படை வீரகள்,ஊர் நிர்வாகிகள் யாவரையும் மன்னனே நியமித்தான்.
மன்னனுக்கு படை மிகவும் முக்கியம்.எல்லா மருத நிலத்து வேளாண் மக்களும் படை வீரர்களாகவே இருந்து வந்தனர்.போர் இல்லாத காலங்களில் ஏர்த்தொழில் செய்தும் வந்தனர்.போர் படையில் வேலை செய்பவர்களும்,வெவ்வேறானவர்களாக இருந்தனர்.எனினும் அவ்விருமறபினரும் மள்ளர் மறபினரே.இம்மறபினரே பின்நாளில் சேர, சோழ , பாண்டியன்களியினர்.
மருத நில மக்கள் மள்ளர், உழவர்,களமர்,கடைஞர்,வினைஞர் ,இளைஞர் ,கம்பளர்,தொழிழுவர், கடைசியர் , ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர்.உழுவுத் தொழில் தலையாய தொழிலாகவும்.உழவர்கள் தலைமக்கள் எனவும் போற்றப்பட்டனர்.மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப்படக் கூறப்பட்டனர்.
அதனாலலே ஏருழவர்,சொல்லேருழவர் வாளேருழவர், வில்லேழரவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர் , மன்னர் என்ற மூன்று சொற்களும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைந்தாகும் மள்ளர்” எனும் பெயர் ‘ திவாகர நிகண்டும் கூறுகின்றது.
“செருமலை வீரரும் தின்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றது”
“ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”
(தொலகாப்பியம்-24)
இங்கு உழவர்களே போர்க்கள மள்ளராக விழங்குவதால் ஏரையும் , போரையும் இனைத்து இலக்கணம் வகுத்துள்ளார். ( தொலகாப்பியம்-24 )
சங்க காலத்துதிற்கு முன்பே இருந்தே தமிழகத்தில் காடு கொண்டு நாடாக்கி மருத நிலத்தில் நாகரீகத்தையும் அரசையும் தோற்றுவித்தவர்கள் மள்ளர்களே, மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர், உழவர் , கடையார் , கடைச்சியர் , ஆற்றுச்சாலாப்டியர் என்று அழைக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு காட்டும்.14ம் நூற்றாண்டு வரை அதாவது மூவேந்தர் ஆட்சி தமிழகத்தில் பின்னடையத் தொடங்கும் வரை தேவேந்திரர்கள் மள்ளர் என்றே இலக்கியத்திலும் வரலாற்றிலும் குறிக்கப்படுகின்றன. மள்ளர் தான் பிற்காலத்தில் பள்ளர் என்று அழைக்கப்பட்டனர் என்பதற்கு ‘பள்ளு நூல்களிளே மள்ளர்-பள்ளர் என்ற இரண்டு சொற்களுமே மாறி மாறி இடம் பெற்று இன்றைய பள்ளரே மள்ளர் எனபதற்கு சான்றாக திகழ்கின்றன.
மள்ளர்களை வீரராக உழவர்களாக காட்டும் சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் மருத நில மக்கள் நாகரிகத்தில் மேம்பட்டவர்கள் ஆவர்.
இன்று தேவேந்திர் என்று அறியப்படும். மள்ளர்களின் தொழில் வேளாண்மை ஆகும்.இவர்கள் இன்று தங்களின் கடவுள் தேவேந்திரன் என்று வணங்கி வருதும் , இவர்களே சங்காலத்து மழவர் , மல்லர் , மள்ளர் , மறவர் என்று அழைக்கப்படும் போர் வீரர்கள். இவர்கள் தொன்மையான மறக்குடியினர் ஆவர்.