09/02/2020
கார் பயன்பாட்டாளர்கள் கொஞ்சம் இதை படிங்க,
சில முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்:
மலைபகுதியில் பயணம் தொடங்கும் போது மேடான பகுதியில் காரை நகர்த்த நாம் சில நேரம் கஷ்டப்படுவதுண்டு, இதற்கு ஒரு எளிய வழி, Handbrake ஐ மேலே ஏற்றி முதல் கியரில் accelerator உதவியுடன் மிக எளிதாக காரை மேடான பகுதியில் நகர்த்தலாம். கவனம், கார் நகர்ந்த மறு கணம் Handbrake ஐ இறக்கி விட வேண்டும்.
சீட்பெல்ட் அணிவது மிகவும் அவசியம் ஏனெனில் பல கார்களில் ஏர்பேக் வசதி சீட்பெல்ட் அணிந்தால் மட்டுமே வேலை செய்யும்.
காரின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க front bumper மற்றும் Bull bar இணைப்பதை தவிருங்கள்!!. இதனால் நவீன ரக கார்களில் ஏர்பேக் வசதி விபத்து காலங்களில் சற்று முன்னதாகவோ அல்லது தாமதமாகவே அல்லது வேலை செய்யாமலோ போவதற்கு வாய்ப்புகள் அதிகம் சில கார் தயாரிப்பாளர்கள் பம்பர் இருந்தாலும் ஏர்பேக் வேலை செய்ய வைத்து விட்டனர் இருப்பினும் ஸ்டீல் பம்பர்கள் விபத்தின் போது சேதாரத்தை அதிகமாவதற்கே வாய்ப்புண்டு.
இந்த பதிவு உபயோகமாக இருந்தால் ஷேர் செய்யவும்.