13/09/2026
🟤⚪🟤 2099-வது நாளின் காலைத்தியானம் 14/09/2026 !!!
இந்த காலைவேளையில், "தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்" ...... "THE ONE WHO HAS BORN OF GOD KEEPS THEM SAFE, AND THE EVIL ONE CANNOT HARM THEM" என்று (1 JOHN) 1 யோவான் 5:18-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
தேவனால் பிறந்தவர்கள், அதாவது இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் பாவத்திலிருந்து தங்களை காத்துக் கொள்வார்கள். பொல்லாங்கன் அவர்களைத் தொடவோ, தீங்கு விளைவிக்கவோ முடியாது.
‘பொல்லாங்கன்’ என்பது சாத்தான் மற்றும் தீய சக்திகளையும் குறிக்கிறது. 1 யோவான் 5:19-ல் “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” என்று பார்க்கிறோம்.
பொல்லாத உலகில் வாழ்கின்ற அவருடைய பிள்ளைகளாகிய நாம், "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், …. விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்" என்று எபேசியர் 6:16-ல் கூறப்பட்டுள்ளது.
மேலும், மற்றவர்களுடைய வாழ்க்கையை அழித்துப் போடும் தீய காரியங்களை செய்வதில் நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாயிருப்போம். “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்…” என்று 1 யோவான் 3:12-ல் மூலமாக வேதம் நமக்கு ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறது.
எனவே பிரியமானவர்களே, பொல்லாங்காய்த் தோன்றுகிற அனைத்தையும் விட்டுவிலகுவோம். பொல்லாங்கன் நம்மைத் தொடாதபடி கர்த்தர் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்.
ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனால் பிறந்த நாங்கள் எங்களைக் காத்துக்கொள்ளவும், பொல்லாங்கன் எங்களைத் தொடாதபடி பாதுகாப்போடு இருக்கவும் ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India