Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(2)

25/06/2026

பெண் பிள்ளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது மகளுக்கு இந்த வீடியோவை பகிருங்கள்.. கேட்க கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் நம் வீட்டு பெண்கள் கூட இந்த தவறை செய்யலாம்.. இன்றைய இளம் பெண்கள் தவறை சரியாக செய்வதால் அது பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது...

நமக்கு 50 வயதை கடந்து அறுபதை நோக்கி செல்லும்போது நமது எண்ண ஓட்டங்கள் நமக்கு எப்படி இருக்கும் தெரியுமா?.. நிச்சயம் அந்த வ...
24/06/2026

நமக்கு 50 வயதை கடந்து அறுபதை நோக்கி செல்லும்போது நமது எண்ண ஓட்டங்கள் நமக்கு எப்படி இருக்கும் தெரியுமா?.. நிச்சயம் அந்த வயதில் நாம் இதை உணர்ந்து கொண்டுதான் போயாக வேண்டிய வரும்.. இப்போதே உணர்ந்து கொண்டால் நாளைய வாழ்வு சிறப்பாக அமையும்..

1. அதுவரை நாம் நமது பெற்றோர்கள், நமது உடன் பிறந்தவர்கள், நமது மனைவி, நமது குழந்தைகள், நமது தோழர்களை நேசித்திருப்போம்.. ஆனால் இந்த வயதில் தான் நம்மை நேசிக்க தொடங்குவோம்..

2. தெருவோரங்களில் காய்கறி விற்பவர்களிடமும் பழங்கள் விற்பவரிடமும் பேரம் பேசுவதை நிறுத்தி விடுவோம்.. முடிந்தால் ஐந்தோ, பத்தோ, சேத்தி கொடுத்துவிட்டு வருவோம்..

3. உணவகங்களில் சாப்பிட்டால் அவர்களுக்கு கேட்காமலேயே டிப்ஸ் தருகிறேன்.. வாழ்க்கையில் அன்றாடம் நடத்தும் போராட்டத்தில் என்னைவிட அதிகமாக போராடும் சர்வரின் முகம் மலருவதில் ஒரு சிறு ஆனந்தம் எனக்கு..

4. சில நேரங்களில் பிறர் சொல்லுவது தவறு என்று தெரிந்தாலும் அவர்களை திருத்தாமல் இருக்க கற்றுக் கொண்டேன் எல்லோரையும் திருத்தும் பொறுப்பு இப்போது என்னுடையது அல்ல.. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டானது என்பது போல்தான் என்பதை புரிந்துகொன்டேன்..

5. பெருந்தன்மையுடன் தாராளமாக மற்றவரை பாராட்டுகிறேன்.. இது பாராட்டு பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சின்ன ஆலோசனையை சொல்கிறேனே, ஒருவர் உங்களை பாராட்டும் போது ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்..

6. நமது ஆடைகளில் யாரோ, ஒருவர் மூலமாக கரை பட்டுவிட்டால் அலட்டிக்கொள்வதுமில்லை கோபப்படுவதும் இல்லை..

7. நமது மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்கிறேன்..

8. யாராவது பொருளாதாரத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோசமாக செயல்பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்திலே இல்லை என் வாழ்க்கையில் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன்..

9. என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்க கற்றுக்கொள்கிறேன். என்னை மனிதனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான் என்பதை உணர்ந்து கொண்டேன்..

10. ஒரு உறவை முறித்துக்கொள்வதைவிட என் ஈகோவை முறித்துக்கொள்வது நல்லது என்பதை உணர்ந்து கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆயிற்று.. எனது ஈகோ என்னை தனிமைப்படுத்தும், உறவுகளால் நான் தனிமைப்பட்டு போக விரும்பவில்லை..

11. ஒவ்வொரு நாளையும் என்இறுதி நாள் போல் வாழ கற்றுக்கொண்டிருந்தேன். ஏன் இது கூட எனக்கு கடைசி நாளாக இருக்கலாம் என்பதை என் மனது சொல்லிக் கொண்டிருக்கிறது..

12. என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன், என்னுடைய சந்தோஷத்திற்கு நான் மட்டும்தான் பொறுப்பு, மகிழ்ச்சி என்பது ஒருதேர்வு அதை தேர்ந்தெடுத்து சரியான முறையில் கையாண்டால் எந்த நேரத்திலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்..

13. எனது தேவைகளை குறைத்துக்கொண்டேன் அதனால் எனக்கு கடன் எதுவும் வேண்டாம் என்பதை புரிந்து கொண்டேன்..

14. மொத்தத்தில் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பணத்தை நோக்கி மட்டும்தான் என்பதையும், அது பயனற்ற வாழ்க்கை என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டேன்.. எனது அறுபதாவது வயதில்..

15. எனக்கு மட்டும் நான் நல்லவன் என்பதை தெரிந்து கொண்டால் போதும் அதை மற்றவர்களிடம் நிரூபிக்க நினைத்தால் நான் பல தவறுகளை செய்ய வேண்டியவரும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்..

16. ஒவ்வொருவரும் கடைசி காலத்தில் திருந்தி என்ன பயன், வெகுதூரம் வாழ்க்கை பயணத்தை கடந்து வந்த பிறகு உணர்ந்து எனக்கு என்ன பயன் என்பதையும் நான் புரிந்து கொண்டு வருந்திய காலமும் உண்டு..

24/06/2026

உங்களின் (மருத்துவர்) அலட்சியத்தால் எங்களின் வாழ்க்கையே போனது.. இன்னும் வெளியில் தெரியாமல் இதுபோல் வாழ்க்கை இழந்தவர்கள் எத்தனை பேர்களோ! இறைவா.. இது தீர்வு காண பதிவு அல்ல..ஒரு எச்சரிக்கை பதிவு..

வயது அதிகமான பெண்ணை வயது குறைவான கோடியில் ஒரு ஆண் மட்டுமே  திருமணம் செய்கிறார்கள்...திருமண வயது பெண்களை விட ஆண்களுக்கு ஏ...
24/06/2026

வயது அதிகமான பெண்ணை
வயது குறைவான கோடியில்
ஒரு ஆண் மட்டுமே
திருமணம் செய்கிறார்கள்...

திருமண வயது பெண்களை
விட ஆண்களுக்கு ஏன் அதிகமாக
இருக்க வேண்டும்...

ஒரே வயதுடைய பெண்களை
ஆண்கள் திருமணம் செய்வதாலோ
இல்லை வயது அதிகமான பெண்களை ஆண்கள் திருமணம் செய்வதாலோ
என்ன பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடும்

1.முதிர்ச்சி அடையும் வேகம் (Maturity Levels):
​உளவியல் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் ஆண்களை விட பெண்கள் விரைவாக முதிர்ச்சி (Emotional & Mental Maturity) அடைகிறார்கள்
என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரே வயதுடைய
ஒரு ஆணும் பெண்ணும் இணையும் போது, சிந்தனையிலும் பொறுப்பேற்பதிலும்
சிறு இடைவெளி இருக்கக்கூடும்...

ஆண் சற்றே கூடுதல் வயதுடையவராக இருக்கும்போது, இருவருக்குள்ளும் ஒரு சமநிலையான புரிதல் ஏற்படும்
என்று நம்பப்படுகிறது....

​2. பொருளாதாரத் தற்சார்பு (Financial Stability):
​பாரம்பரிய சமூக அமைப்பில்,
குடும்பத்தைக் காப்பாற்றும்
முக்கிய பொறுப்பு
ஆண்களுக்குரியதாக இருந்தது....

படிப்பு முடித்து, ஒரு நிலையான
வேலை தேடி, பொருளாதார ரீதியாக
ஒரு குடும்பத்தை வழிநடத்தும்
தகுதியைப் பெற ஆண்களுக்கு சில ஆண்டுகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது...

இதனால், பெண் தன் படிப்பை முடிக்கும் அதே நேரத்தில், ஆண் தன் வேலையில் செட்டிலாகியிருக்க வயது வித்தியாசம் உதவியாக இருந்தது....

​3. உயிரியல் மற்றும் குழந்தைப்பேறு: (Biological Reasons)
​பெண்களின் மறு உற்பத்தித் திறன் (Fertility) மற்றும் பிரசவத்திற்கான உகந்த வயது வரம்பு, ஆண்களை விட சற்றே மாறுபட்டது...

குறிப்பிட்ட வயதுக்கு மேல்
பெண்களுக்கு பிரசவத்தில் சில
சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது...

எனவே, பெண் சரியான வயதில்
தாயாக மாறுவதற்கும், அதே நேரத்தில்
ஆண் குடும்பப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முதிர்ச்சி அடைவதற்கும்
இந்த வயது வித்தியாசம்
அவசியமாகப் பார்க்கப்பட்டது....

23/06/2026

18+ பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பேசும் பெண்களுக்காக இந்தப்பதிவு..

23/06/2026

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது.. ஆனாலும், நாம் திருந்தப்போவது இல்லை..

23/06/2026

Free shipping..
DSP AND POOMER FINE PACKET TRUNKS..
75 To 90 Sizes.. Rs.1500..
95 to 110 sizes..
Rs.1600..
5pes வாங்கினால் +shipping,,
Only WhatsApp Order..
9976261024..
Aththanoortex Sathiyavarman Erode

மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா?தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு?மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாதிப்பிங்க ?தந்தை : ...
23/06/2026

மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு?

மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாதிப்பிங்க ?

தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம் ... நீ எதுக்கு இதெல்லாம் கேக்குறே ?

மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுங்கப்பா...

தந்தை : உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...சராசரியா மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் ...

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா எனக்கு 50 ருபாய் தரீங்களா?

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : நீ இவ்ளோ பணம் கேக்குறது
ஒரு கார் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?...
ஒழுங்கா போய் படுத்து தூங்கு ...
நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்...

அந்த சின்னப்பையன் அமைதியா
அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..

1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே
ஏதோ அவசிய தேவை இருந்தால்
என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : தூங்கிட்டியாடா ?

மகன் : இல்லப்பா...முழிச்சிட்டுதான் இருக்கேன் ...

தந்தை : நா உன்கிட்ட ரொம்ப
கோபமா நடந்துகிட்டேன் ..
நாள் பூரா வேலை செஞ்சதுல
இருந்த கோபத்துல திட்டிட்டேன்...
இந்தா நீ கேட்ட 50 ரூபாய் ....

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..

மகன் : ரொம்ப தேங்க்ஸ் ப்பா...

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரி பார்த்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு
சேர்த்து வச்சி இருக்கியே ...

மகன் : ஏன்னா தேவையான பணம்
என் கிட்ட இல்ல... இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா,
இப்போ என்கிட்ட 100 ரூபாய் இருக்கு
இதை நீங்களே வச்சிக்கோங்க ...
இப்போ நான் உங்களோட
1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்...

படித்ததில் பிடித்த பகிர்வு..

22/06/2026

எந்த வலியும் தனக்கு வரும்போதுதான்.. அதன் வேதனையை உணரமுடியும். பாசத்தை பணத்திற்காக கொளுத்தி விடாதீர்கள்.. அந்த தீ நாளை உங்களையே திரும்பி தாக்கும்..

பெற்றோர்கள் மேல் இருந்தஅன்பும் மரியாதையும் குழந்தைகளுக்கு எப்போ போச்சு?…எப்படி போச்சு?... இருந்தால் தானே போக?...உண்மையில...
22/06/2026

பெற்றோர்கள் மேல் இருந்த
அன்பும் மரியாதையும்
குழந்தைகளுக்கு எப்போ போச்சு?…
எப்படி போச்சு?...

இருந்தால் தானே போக?...
உண்மையில் பெற்றோர்கள் மேல்
அன்பும், மரியாதையும்
இப்போது உள்ள தலை முறையினருக்கு இல்லவே இல்லை எனும் போது
எப்போ போச்சு? எப்படி போச்சு? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை...!
என்று தோன்றுகிறது....

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
போன்ற விடுவிக்க முடியாத சில புதிர்களை போல தான் இதற்கான விடையும்...

சிறு வயதில், வேலைக்கு செல்லும் பெற்றோர்களுடன் இருக்கும் குழந்தைகள் கேட்டது எல்லாம் கிடைக்கும்....

வீட்டுக்கு வந்தால்
பூட்டி இருக்கும்
கதவை திறந்து தனிமையில்
தொலை காட்சியையும்
வீடியோ கேம் ஐயும் விளையாடி
அந்த தனிமையில் ஏகாந்தமாக விளையாடும் குழந்தைகள்
அந்த வயதில்
பெற்றோரிடம் எதிர் பார்ப்பது
அன்போடு கலந்த அக்கறை...

அது அவர்களுக்கு கிடைக்காத போது
தொலை காட்சியும், மொபைல் போனும் தான் உற்ற நண்பர்கள்....

பெற்றோர்கள் சொல்லி தர வேண்டியதை
கூகுள் அண்ணா வடிகட்டாமல்
ஆதியோடு அந்தமாக சொல்லி
கொடுத்து விடுவார்...

குழந்தைகளுடன் அதிக நேரத்தை
செலவிட முடியாத பெற்றோர்கள்
அந்த குற்ற உணர்ச்சியை போக்க
கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து
அவர்களை பொறுப்பற்றவர்களாகவும் கேட்டது கிடைக்காவிடில் பிடிவாதம் பிடித்தாவது சாதித்து
தான் உரிமையை நிலை நாட்டலாம்!
என்ற மன நிலையை
கொண்டு வந்து விடுகிறார்கள்....

அப்பா ATM மச்சினி...
அம்மா வேலை செய்யும் மெஷின்...
இது தான் சிறு வயது முதல் அவர்கள் மனதில் பதிந்த விஷயம்...

மெஷின் தன் வேலையை நிறுத்தி கொள்ளும் போது இடத்தை அடைக்கும்
ஜட பொருளாக போக, dispose செய்ய வேண்டிய அவசியம்
ஏற்பட்டு போகிறது பிள்ளைகளுக்கு...

பல வருடங்களுக்கு,
முன் இருந்த கூட்டு குடும்ப வாழ்க்கையும் மாறி, தீவு குடும்பமாக வாழும் நிலையும், இளையோரின் இத்தகைய
மனபோக்குக்கு காரணம்....

தன் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகள்
தன் பிள்ளைகளுக்கு தான் முன்னோடி என்பதை மறந்து போகிறார்கள்...

வயதான காலத்தில் தன் பிள்ளைகள் தங்களை பராமரிப்பு செய்வார்கள்!
என்ற நம்பிக்கையும்
இப்போது உள்ள
பெற்றவர்களுக்கு இல்லை....
பெற்ற கடமைக்கு படிக்க வச்சாச்சு!
என் கையில் நாலு காசு இருந்தா, இவனுகளை நம்பி நான் இல்லை!
என்ற தைரியமும், இப்போது உள்ள பெற்றோர்களிடம் வந்து விட்டது....

கிராமங்களை விட்டு,
வேலை காரணமாக வெளியூர் வரும் பலர், இட பற்றாக்குறை காரணமாக, பெற்றோர்களை, சொந்த ஊரில் விட்டோ, இல்லங்களில் விட்டோ,
தன் குழந்தைகளுக்கு அன்பான தாத்தா பாட்டி உறவையும் அனுபவங்களையும்
நல்ல ஆசான்களையும் மறுதலிக்க
செய்து விடுகிறார்கள்...

அதற்கு பின்?
எது விதைக்க படுகிறதோ....
அதுவே அறுவடைக்குறிய
வினைப் பயனாக ஆகி விடுவதை
எதிர் கொள்ளத் தானே வேண்டும்?

Address

தமிழ்நாடு
Erode

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share