PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

  • Home
  • India
  • Chidambaram
  • PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்

PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் PortoNovO Payaniyar Nala Sangam (PNO-PNS) is started to highlight the demands, needs, concerns etc. from Passengers (Rail, Road & River) of Parangipettai
(1)

பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கேட்ட பயங்கர இடி சத்தம் மற்றும் நில அதிர்வு: ஹைட்ரோகார்பன் நிறுவனங்களி...
26/08/2026

பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கேட்ட பயங்கர இடி சத்தம் மற்றும் நில அதிர்வு: ஹைட்ரோகார்பன் நிறுவனங்களின் 'ஏர்-கன்கள்' காரணமோ என வலுத்த சந்தேகம்! ONGC அளித்த RTI பதில் கடிதத்தால் திடுக்கிடும் தகவல் வெளியீடு!

பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கேட்ட பயங்கர இடி சத்தம் மற்றும் நில அதிர்வுகளுக்குப் பின்னணியில் ஹைட்ரோகார்பன் நிறுவனங்களின் 'ஏர்-கன்களின்' (Air guns) நாசகார அறிவியல் சதி இருக்குமோ என்று மிக பலத்த சந்தேகம் கொள்ளத் தற்போதைய நிலவரப்படி வலுவான வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.facebook.com/share/p/1cL76Hu7jg/

பரங்கிப்பேட்டை சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான கலீல் பாகவீ அவர்கள், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் (MoPNG) வழியாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் (RTI Reg No: ONGCL/R/T/26/00066) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற அசல் பதில் கடிதம் மற்றும் பாதுகாப்பு விதிகளின் (OISD Standards) மூலம் இந்தத் திடுக்கிடும் சந்தேகங்களுக்கான பின்னணிகள் இன்று தெரியவந்துள்ளன.

🚨 #பரங்கிப்பேட்டை_மக்களே_உஷார்! நேற்று கேட்ட அந்த பயங்கர இடி சத்தத்தின் ரகசியம் என்ன?

நேற்று நமது பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 கி.மீ சுற்றளவிற்குப் பயங்கர இடி சத்தமும், சில இடங்களில் பூகம்பம் போன்ற நில அதிர்வுகளும் ஏற்பட்டதை மக்கள் பரவலாக உணர்ந்து அச்சமடைந்தனர். கடந்த மாதமும் இதேபோன்ற சத்தங்கள் கேட்டன.

இதற்கும், நமது கடலில் அமையவுள்ள நாசகார ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதைக் கண்டறியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் 'ஏர்-கன்கள்' (Air guns) மற்றும் நில அதிர்வு ஆய்வுகள் (Seismic Surveys) உருவாக்கும் செயற்கை அதிர்வு அலைகள்தான் (Artificial Shock Waves) இந்த பயங்கர சத்தத்திற்கும் அதிர்வுகளுக்கும் முதன்மைக் காரணம் என்று அறிவியல் கூறுகிறது.

மக்களாகிய நமக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இறுதி அனுமதியைப் பெறும் முன்பே, மத்திய அரசின் 'B2' பிரிவு சலுகைகளைப் பயன்படுத்தித் திருட்டுத்தனமாகக் கடலுக்குள் ஏர்-கன்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்களோ? என்ற பலத்த சந்தேகம் கடலோர மக்களிடையே எழுந்துள்ளது.

🛑 மக்கள் கருத்து கேட்பை முடக்கும் 'B2' சட்டச் சதி

ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு முன்பாகப் பின்பற்ற வேண்டிய சுற்றுச்சூழல் விதிகளின் கீழ், கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது கடலில் கிணறுகளைத் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு மிகப்பெரிய சட்ட ஓட்டை ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பதில் மூலம் அம்பலமாகியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 16 ஜனவரி 2020 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification No. S.O. 236(E)) படி, நிலத்திலோ அல்லது கடலிலோ ஹைட்ரோகார்பன் மற்றும் எரிவாயு ஆராய்ச்சித் துளையிடுதல் மேற்கொள்ளும் அனைத்துத் திட்டங்களும் 'B2' (Category B2) என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளன என்பதை ஓ.என்.ஜி.சி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் உள்ள சட்டபூர்வ பேராபத்து:

அசல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு 2006, பிரிவு 7(i)-இன் படி, "அனைத்து 'Category B2' திட்டங்களுக்கும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் (Public Hearing) நடத்துவதிலிருந்து முழுமையாக விதிவிலக்கு அளிக்கப்படுகிறது" என்று சட்டம் கூறுகிறது.

அதாவது, இந்த 'B2' வகைப்பாட்டைப் பயன்படுத்தி, உள்ளூர் மீனவ மற்றும் விவசாய மக்களாகிய நம்மைக் கேட்காமலேயே, எவ்விதக் கருத்துக் கேட்புக் கூடமும் நடத்தாமல் தன்னிச்சையாக அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.

🌊 கடலுக்குள் 100 கி.மீ பாயும் ஏர்-கன்களின் நாசகார அறிவியல்

கடலுக்கு அடியில் ஹைட்ரோகார்பன் உள்ளதா கண்டறியப் பயன்படுத்தப்படும் நில அதிர்வு ஆய்வுகளின் போது, மிக உக்கிரமான ஒலி அலைகளை உண்டாக்கும் 'ஏர்-கன்கள்' (Air guns) பயன்படுத்தப்படுகின்றன.

சத்தத்தின் தன்மை: ஏர்-கன்கள் என்பவை கடலுக்கு அடியில் மிக அதிக அழுத்தத்தில் சுருக்கப்பட்ட காற்றை நொடிக்கும் குறைவான நேரத்தில் திடீரென வெடித்து வெளியேற்றும் கருவிகள் ஆகும்.

இது கடற்கரையிலோ அல்லது படகுகளிலோ இருக்கும்போது பயங்கரமான அதிர்வு சத்தமாக மனிதக் காதுகளில் கேட்கும். இந்த வெடிச்சத்தம் ஒவ்வொரு 10 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை, இரவு பகலாகத் தொடர்ந்து வாரக்கணக்கில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

எதிரொலிக்கும் தொலைவு: ஒலி அலைகள் கடல் நீரில் சுமார் 5 மடங்கு அதிவேகமாகவும், மிக நீண்ட தொலைவும் பரவக்கூடியவை. கடலுக்குள் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் ஏர்-கன்கள் வெடித்தாலும், கடற்கரையில் இருக்கும் மனிதர்களுக்கு அந்தச் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்கும்.

கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பேரழிவு: கடலுக்கு அடியில் இந்தச் சத்தம் 100 கிலோமீட்டர் தொலைவு வரை மிக உக்கிரமாக எதிரொலிக்கும். இதனால் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒலிவ் ரிட்லி ஆமைகளின் செவிப்புலன் முற்றிலும் செயலிழந்து, ரத்தக் கசிவு ஏற்பட்டு அவை இறக்க நேரிடும்.

மேலும், மீன்கள் இந்த பயங்கரமான இடி சத்தத்திற்குப் பயந்து தங்களது பாரம்பரிய இனப்பெருக்க மண்டலங்களை (Breeding blocks) விட்டு ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்து ஓடிவிடும் என்பதால் மீன்பிடித் தொழில் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும்.

📢 அவசர எச்சரிக்கை அறிக்கை:

"தமிழக சட்டமன்றத்தில் கடந்த வாரம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனமான HOEC இத்தகைய மத்திய அரசின் 'B2' சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமே நடத்தாமல் 'பரிவேஷ்' இணையதளம் வழியாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) அனுமதியைப் பெறத் தீவிரமாக முயன்று வருகிறது.

மத்திய அரசின் இந்த 'B2' வகைப்பாட்டுச் சலுகைகளைத் தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும், நமது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகளின்படி HOEC நிறுவனத்தின் விண்ணப்பங்களைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகளையும், கடலூர் மாவட்ட நிர்வாகத்தையும் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம். நேற்று கேட்ட அந்தப் பயங்கர இடி சத்தங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அவசரமாக விசாரணை நடத்த வேண்டும்" என கலீல் பாகவீ எச்சரித்துள்ளார்.

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) | சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SEA-ToP)
[email protected] | PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் | www.x.com/PNO_PNS | www.youtube.com/-PNS

District Collector Cuddalore மு.தமிமுன் அன்சாரி Thol.Thirumavalavan Chief Minister of Tamil Nadu RTI INDIA

#20ஆண்டுகாலகார்ப்பரேட்துரோகம் #அம்பலமானதுநாசகாரரகசியம் #ஏர்கன்அபாயம் #ஹைட்ரோகார்பன்சதி #சிதம்பரம்MPபதில்சொல் #எம்எல்ஏக்களேகுரல்கொடுங்கள் #பரங்கிப்பேட்டைகாப்போம் #கடலூர்சுற்றுச்சூழல் #கலீல்பாகவீமக்கள்இயக்கம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டும்... பரங்கிப்பேட்டையின் கோரிக்கைகளும்... - 2தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு பட்...
26/08/2026

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டும்... பரங்கிப்பேட்டையின் கோரிக்கைகளும்... - 2

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு 23 துறைகளின் பரங்கிப்பேட்டைக்கான 66 கோரிக்கைகள் அடங்கிய முதன்மை கோரிக்கைத் தொகுப்பு (Master Petition Bundle)

உள்துறை சார்ந்த கோரிக்கைகள்

1. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை நிலைநாட்டிடும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ பிரிவை பரங்கிப்பேட்டையில் ஏற்படுத்த வேண்டும்.

2. இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான சொத்து முடக்கம் உள்ளிட்ட அவசரச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 65 'STING' போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு அலகுகளில் ஒன்றை பரங்கிப்பேட்டையில் அமைக்க வேண்டும்.

3. போதைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்களை மீட்டெடுத்து அவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றும் உன்னத நோக்கோடு அமைக்கப்படும் அரசு போதை மறுவாழ்வு மையங்களில் ஒன்றை பரங்கிப்பேட்டையில் அமைக்க வேண்டும்.

4. சட்டம் ஒழுங்கைப் பேணும் காவலர்களின் நல்வாழ்விற்காக மாவட்டங்கள் தோறும் கட்டப்படும் 5,000 புதிய காவலர் குடியிருப்புகளில் ஒன்றை பரங்கிப்பேட்டையிலும் கட்ட வேண்டும்.

5. பரங்கிப்பேட்டை கடலோர காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

6. அனைத்து மகளிர் காவல் நிலையம் பரங்கிப்பேட்டையில் உருவாக்க வேண்டும்.

7. பரங்கிப்பேட்டையின் போக்குவரத்து பிரச்சினைகளை சீர்செய்ய பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

8. சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்காக முழுநேர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வகையிலும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளை இணைத்து புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.

தயாரிப்பு: கலீல் பாகவீ

பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) | சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SEA-ToP)
[email protected] | www.facebook.com/PNOPNS | www.x.com/PNO_PNS | www.youtube.com/-PNS

District Collector Cuddalore மு.தமிமுன் அன்சாரி Thol.Thirumavalavan கலீல் பாகவீ Chief Minister of Tamil Nadu

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டும்... பரங்கிப்பேட்டையின் கோரிக்கைகளும்... - 1தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு பட்...
26/08/2026

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டும்... பரங்கிப்பேட்டையின் கோரிக்கைகளும்... - 1

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு 23 துறைகளின் பரங்கிப்பேட்டைக்கான 66 கோரிக்கைகள் அடங்கிய முதன்மை கோரிக்கைத் தொகுப்பு (Master Petition Bundle)

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்நத கோரிக்கைகள்

https://www.facebook.com/share/p/1JjhjYdvat/

1. முறையான நிலத்தடிக் கழிவுநீர் வடிகால் வசதி (பாதாளச் சாக்கடைத் திட்டம்), நவீனத் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பழுதடைந்த நகரச் சாலைகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பரங்கிப்பேட்டைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

2. அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அரசுப் பொது திருமண மண்டபம் / சமூக நலக்கூடம் (Community Hall) அமைத்திட வேண்டும்.

3. அரசு மருத்துவமனை அருகிலேயே முறையான பராமரிப்புடன் கூடிய நவீன பொதுக் கழிப்பிடம் கட்டப்பட வேண்டும்.

4. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், பசுமைப் பூங்காக்கள் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நனவாக்கவும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டையில்...

I. பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்களை உருவாக்குதல்,
II. கோவில், சர்ச், மசூதி, தர்கா போன்ற சமய இடங்களிலுள்ள மற்றும் தனியாருக்கு சொந்தமான நீர்நிலைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி குளங்கள், ஓடைகள், வாய்க்கால்கள் மற்றும் குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை புனரமைக்கும் / மேம்படுத்தும் பணிகள்,
III. நீர்நிலைகளைச் சுற்றி நடைபாதை, வேலி, இருக்கைகள், குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுதல்,
IV. மழை காலத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர், நீர்நிலைகளுக்கு சென்று சேரும் வகையில் வழிகள் ஏற்படுத்துதல்,
V. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,
VI. பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்துதல்,
VII. புதிய குடிநீர் குழாய் மற்றும் கழிவநீர் குழாய் இணைப்புகளை வழங்குதல்,
VIII. தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையங்களை அமைத்தல்

4. பரங்கிப்பேட்டை முழுவதும் புதிய கதவு எண்கள் வழங்க வேண்டும்.

5. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் விசாலமான இடத்தில் வாரச்சந்தை அமைக்கப்பட வேண்டும்.

தயாரிப்பு: கலீல் பாகவீ

பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) | சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SEA-ToP)
[email protected] | PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் | www.x.com/PNO_PNS | www.youtube.com/-PNS

District Collector Cuddalore Chief Minister of Tamil Nadu மு.தமிமுன் அன்சாரி Thol.Thirumavalavan கலீல் பாகவீ

சின்ன தகவலைக் கூட வழங்க முடியாது என்று சொன்ன அதிகாரிகள்: விடாமுயற்சியால் பணிந்த சேலம் ரயில்வே கோட்டம்.அதிகாரக் கோட்டையைத...
25/08/2026

சின்ன தகவலைக் கூட வழங்க முடியாது என்று சொன்ன அதிகாரிகள்: விடாமுயற்சியால் பணிந்த சேலம் ரயில்வே கோட்டம்.

அதிகாரக் கோட்டையைத் தகர்த்த சாமானியனின் விடாமுயற்சி: தீர்வு கிடைக்கும் வரை ஓயாமல் போராடிப் பெற்ற வரலாற்று வெற்றி!

பொதுமக்கள் கேட்கும் எளிய உள்கட்டமைப்புத் தகவல்களைத் தர மறுத்து, "நேரில் வந்து பார்" என்று சாக்குப்போக்கு சொல்லிய சேலம் ரயில்வே கோட்டத்தின் அதிகாரத்துவப் போக்கை, மத்திய அரசின் ஆன்லைன் புகார் தளம் (CPGRAMS) மூலம் ஒரு சாமானியர் ஒற்றைப் புகாரில் அதிரடியாக வீழ்த்தியுள்ளார்.

https://www.facebook.com/share/p/1GT7CB1fDK/

பரங்கிப்பேட்டை சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SEA-ToP) நிறுவனரும், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) ஒருங்கிணைப்பாளருமான கலீல் பாகவீ அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்திற்குப் பாரிய வெற்றி கிடைத்துள்ளது.

⏱️ கோரிக்கையின் பின்னணியும் அதிகாரிகளின் இழுத்தடிப்பும்

கடந்த 18.06.2026 அன்று தெற்கு ரயில்வே தலைமையகத்திற்குத் திரு. கலீல் பாகவீ ஒரு RTI விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அதில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள சில முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடை (Platform) எண்ணிக்கை மற்றும் அவற்றின் நீள விவரங்களைக் கோரியிருந்தார். தலைமையகம் இந்த மனுவை அந்தந்தக் கோட்டங்களுக்குப் பிரித்து அனுப்பியது.

இதில் திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, சென்னை, பாலக்காடு மற்றும் மதுரை ஆகிய 5 சகோதரக் கோட்டங்களும் எவ்வித ஆட்சேபனையும் இன்றி, தங்களின் முழுமையான தரவுகளை உடனடியாக அஞ்சல் மூலம் வழங்கி வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொண்டன. மதுரை கோட்டமோ ஒருபடி மேலே போய், தங்கள் கோட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களின் 6 பக்கப் பட்டியலையே வழங்கியது.

ஆனால், சேலம் கோட்டம் மட்டும் ஆரம்பம் முதலே விசித்திரமான முட்டுக்கட்டைகளைப் போடத் தொடங்கியது:

1. முதல் மழுப்பல் (14.07.2026): சேலம் கோட்ட தகவல் அதிகாரி (PIO), "நீங்கள் கேட்டுள்ள கேள்வி தெளிவாக இல்லை" என்று கூறி மனுவை அநியாயமாக நிராகரித்தார்.

2. முதல் மேல்முறையீடு (15.07.2026): மற்ற கோட்டங்கள் வழங்கிய பதில்களை ஆதாரமாகக் காட்டி திரு. கலீல் அகமது உடனடியாக முதல் மேல்முறையீடு செய்தார்.

3. இரண்டாவது மழுப்பல் (12.08.2026): மேல்முறையீட்டை விசாரித்த கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ADRM), "கேள்வி புரியவில்லை" என்ற முந்தைய சாக்கைக் கைவிட்டுவிட்டு, "இந்தத் தரவுகள் எங்களிடம் தொகுக்கப்பட்ட வடிவில் இல்லை. வேண்டுமென்றால் பல கிலோமீட்டர்கள் பயணித்து, சேலம் அலுவலகத்திற்கு நேரில் வந்து 30 நாட்களுக்குள் கோப்புகளை ஆய்வு (Inspection) செய்துகொள்ளுங்கள்" எனச் சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டமாகப் பதிலளித்தார்.

⚡ போர்க்களமாக மாறிய சிபிகிராம்ஸ் (CPGRAMS) – வீழ்ந்த அதிகாரிகள்!

வெறும் 4 ரயில் நிலையங்களின் நடைமேடை விவரங்களை (வெறும் 15 வார்த்தைகளில் அடங்கும் பதில்) வழங்குவதற்குப் பதிலாக, ஒரு சாமானியனைப் நூற்றுக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வைத்து அலைக்கழிக்க நினைத்த அதிகாரிகளின் போக்கை திரு. கலீல் பாகவீ சாதாரணமாக விட்டுவிடவில்லை.

17.08.2026 அன்று மத்திய அரசின் பொது மக்கள் குறைதீர்ப்புப் போர்ட்டலான CPGRAMS தளத்தில் (Registration No. MORLY/E/2026/0042367) நேரடியாக ரயில்வே அமைச்சகத்திற்குக் காரசாரமான புகாரை அனுப்பினார்.

"வெறும் 15 வார்த்தைகளில் எழுத வேண்டிய பதிலுக்குச் சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு பொதுமக்களை அலைக்கழிப்பது நிர்வாகச் சோம்பேறித்தனத்தின் உச்சம்; மற்ற 5 கோட்டங்கள் வழங்கியபோது சேலம் கோட்டம் மட்டும் தர மறுப்பது ஏன்?" எனப் புகாரில் ஆணித்தரமாகக் கேள்வி எழுப்பினார்.

🏛️ RTI மற்றும் CPGRAMS-இன் முக்கியத்துவம்: இருண்ட அதிகாரத்துவத்தை வீழ்த்தும் இரட்டைக் கேடயங்கள்!

இந்த வெற்றி, தற்கால ஜனநாயக அமைப்பில் RTI (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மற்றும் CPGRAMS (மத்திய பொது மக்கள் குறைதீர்ப்பு தளம்) ஆகிய இரண்டும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் என்பதை நிரூபித்துள்ளது.

RTI-இன் வலிமை: அரசாங்கத்தின் ரகசியக் கோப்புகளைத் திறந்து, உள்கட்டமைப்பு விவரங்களை சாமானியனின் மேஜைக்குக் கொண்டு வரும் வெளிப்படைத்தன்மையின் சாவிதான் RTI. நிர்வாகத்தின் தவறுகளையும் முரண்பாடுகளையும் சட்டப்பூர்வ ஆதாரமாக மாற்றுவதற்கு இதுவே அடித்தளம்.

CPGRAMS-இன் அதிரடி வேகம்: RTI-இல் அதிகாரிகள் மழுப்பலாகப் பதிலளித்து இழுத்தடிக்கும்போது, அவர்களை நேரடியாக அமைச்சகத்தின் கண்காணிப்புப் வளையத்திற்குள் கொண்டு வரும் சாட்டைதான் CPGRAMS. அடிமட்ட அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தையும் அலட்சியத்தையும் டெல்லி மேலிடத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்று, அவர்களின் அலைக்கழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இறுதிப் புகலிடமாக இது செயல்படுகிறது.

RTI மூலம் ஆதாரங்களைத் திரட்டி, CPGRAMS மூலம் அழுத்தம் கொடுக்கும்போது எப்பேர்ப்பட்ட கடினமான அதிகாரத்துவமும் மக்கள் சக்திக்கு முன்னால் மண்டியிட்டே தீரும் என்பதற்கு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பே சாட்சி!

🏆 இறுதி வெற்றி: இரண்டே நாட்களில் வந்த அதிகாரப்பூர்வத் தரவு!

புது தில்லி ரயில்வே அமைச்சகத்தின் நேரடிப் பார்வைக்கு இந்தப் புகார் சென்ற அடுத்த 48 மணி நேரத்திற்குள் சேலம் ரயில்வே கோட்டம் நிலைகுலைந்தது. "தரவுகள் தொகுப்பாக இல்லை, நேரில் வாருங்கள்" என்று பிடிவாதம் பிடித்த அதே அதிகாரிகள், 19.08.2026 தேதியிட்ட அவசர அதிகாரப்பூர்வக் கடிதம் (No:SA/W.571/CPGRAMS) மூலமாக, அவர் கேட்ட 4 நிலையங்களின் துல்லியமான நடைமேடை நீளம், அகல விவரங்களைத் அனுப்பி வைத்துள்ளனர்.

டெல்லி தகவல் ஆணையம் வரை செல்லாமல், தங்களின் உரிமைகளுக்காகச் சாமானிய மக்கள் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு அதிகாரத்துவத்தை பணிய வைக்க முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாய் மாறியுள்ளது.

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)
[email protected] | PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் | www.x.com/PNO_PNS

#சமூகஆர்வர் #சட்டப்போராட்டம் #தகவல்அறியும்உரிமைச்சட்டம் #ரயில்வேநிர்வாகம் #சேலம்ரயில்வேகோட்டம் #பொதுமக்கள்வெற்றி #சிபிகிராம்ஸ் #வெளிப்படைத்தன்மை

ஹைட்ரோகார்பன் நிறுவனத்தின் 20 ஆண்டுகால ஏமாற்று வேலை அம்பலம்பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் கடல் பகுதியில் HOEC நிறுவனம் அம...
24/08/2026

ஹைட்ரோகார்பன் நிறுவனத்தின் 20 ஆண்டுகால ஏமாற்று வேலை அம்பலம்

பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் கடல் பகுதியில் HOEC நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டுள்ள 4 புதிய நாசகார ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு எதிராக, பரங்கிப்பேட்டை சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனரும் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கலீல் பாகவீ அவர்கள் நடத்தி வரும் சட்டப் போராட்டம் தற்போது ஒட்டுமொத்தப் பொதுமக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் தட்டியெழுப்பும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

https://www.facebook.com/share/p/1BhunZPwY4/

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்ட மேல்முறையீட்டு அதிகாரியின் (FAA) அதிரடி உத்தரவின் மூலம், HOEC நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக ஒளித்து வைத்திருந்த 2006-ஆம் ஆண்டின் அசல் சுற்றுச்சூழல் அனுமதி கடிதம் (EC Letter) மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) 500 பக்க ஆவணங்களை கலீல் பாகவீ அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI எண்: MOENF/R/E/26/01138) கீழ் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார்.

மக்களுக்குத் தெரியாமல் நடந்த கார்ப்பரேட் சதி:

RTI மூலம் பெறப்பட்ட அந்த அசல் ஆவணங்களை ஆய்வு செய்ததில், கடந்த 2006 மே 29 அன்று இத்திட்டத்திற்கு முதன்முதலில் அனுமதி வழங்கப்பட்ட போது, கடலோரப் பகுதி மீனவ மற்றும் விவசாய மக்களிடம் எவ்விதக் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தாமல் (No Public Hearing Required) கார்ப்பரேட் நிறுவனம் தன்னிச்சையாக அனுமதி வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

மேலும், கடலூர்-பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மீன்களோ, பாதுகாக்கப்பட்ட ஒலிவ் ரிட்லி ஆமைகளோ இல்லை என்று அப்பட்டமான பொய்களைக் கூறி கார்ப்பரேட் நிறுவனம் அரசை ஏமாற்றியுள்ள தொழில்நுட்ப உண்மைகளும் வெளிவந்துள்ளன.

மீண்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள்:

இந்த 20 ஆண்டு பழைய காலாவதியான கோப்பை கையில் வைத்துக்கொண்டு, தற்போது 'பரிவேஷ்' (PARIVESH) இணையதளம் வழியாகப் புதிய கிணறுகளைத் தோண்ட முயலும் HOEC நிறுவனத்தின் விண்ணப்பங்களை உடனடியாக நிராகரிக்கக் கோரி, கலீல் பாகவீ அவர்கள் மத்திய அரசின் PG போர்டல் மற்றும் மின்னஞ்சல் வழியாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தமிழக முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu, அமைச்சர்கள் Aadhav Arjuna Tamilan Salem Parthiban, கடலூர் மாவட்ட ஆட்சியர் District Collector Cuddalore, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் Thol.Thirumavalavan மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனைவருக்கும் இந்தத் தொழில்நுட்ப மறுப்பு மனுவின் நகல்களை அவசரமாக அனுப்பியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் கலீல் பாகவீயின் எழுச்சி அறிக்கை:

"கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகத் தயாரித்த 20 ஆண்டு காலப் பழைய பொய் அறிக்கைகளை நாம் சட்டப்பூர்வமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளோம். பந்து தற்போது முழுமையாகத் தமிழக அரசின் வசமும், நமது மக்கள் பிரதிநிதிகளின் வசமும் உள்ளது.

சிதம்பரம் தொகுதி எம்பி மற்றும் எம்எல்ஏ அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஒற்றைக் குரலில் ஒலிக்க வேண்டும். மக்களாகிய நாமும் நமது வாழ்வாதாரத்தைக் காக்க நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" என அவர் தனது செய்தி அறிக்கையில் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

- பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)

#20ஆண்டுகாலகார்ப்பரேட்துரோகம் #அம்பலமானதுநாசகாரரகசியம் #பொய்கூறிஏமாற்றியHOEC #சிதம்பரம்MPMLAக்களேகுரல்கொடுங்கள் #பரங்கிப்பேட்டைகடற்கரையைகாப்போம் #பிச்சாவரம்காடுகளைகாப்போம் #மீனவர்வாழ்வாதாரத்தைக்காப்போம் #திருட்டுஅனுமதிவேண்டாம் #கலீல்பாகவீ #மக்கள்இயக்கம்

பரங்கிப்பேட்டை - சென்னை (ECR) - பரங்கிப்பேட்டை பேருந்து கால அட்டவணைஅதிகாலை 4:45 மணிக்கு 288 ECR பேருந்தில்...https://www...
23/08/2026

பரங்கிப்பேட்டை - சென்னை (ECR) - பரங்கிப்பேட்டை பேருந்து கால அட்டவணை

அதிகாலை 4:45 மணிக்கு 288 ECR பேருந்தில்...

https://www.facebook.com/share/p/19diC1mgDY/

பரங்கிப்பேட்டையிலிருந்து நேரடியாக....

கடலூர் - அரவிந்த் கண் மருத்துவமனை - புதுச்சேரி - கோட்டகுப்பம் - புதுச்சேரி பல்கலைக்கழகம் - கூனிமேடு,

மரக்காணம் - பனையூர் - (ஆலம்பரா கோட்டை) - கூவத்தூர் - மாமல்லபுரம் - வட நெம்மேலி - முதலைப் பண்ணை,

கோவளம் தர்ஹா - முட்டுக்காடு படகுக்குழாம்) - MGM - கானத்தூர் (மாயாஜால் - Amet Marine University - Indian Maritime University - Raaga's Dental College),

உத்தண்டி - பனையூர் - Water Tank (சோழிங்கநல்லூர் - சிறுசேரி தொழிற்பூங்கா - Global Hospital - மேடவாக்கம் - பள்ளிக்கரணை),

VGP - ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி - நீலாங்கரை - பாலவாக்கம் - கொட்டிவாக்கம் - திருவான்மியூர்,

அடையாறு (Cancer Institute, பாம்புப் பண்ணை, காந்தி மண்டபம், அண்ணா பல்கலைக்கழகம், கவர்னர் மாளிகை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி),

கிண்டி தேசிய பூங்கா - கத்திப்பாரா ரவுண்டானா - அசோக்நகர் - வடபழனி ஆகிய வழிகளில்...

கோயம்பேடு (சென்னை) செல்லலாம்...

மீண்டும் இதே பேருந்தில் காலை 11:30 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு அதே வழிகளில் பரங்கிப்பேட்டை வரலாம்.

அரசுப் பேருந்துகளை முழுமையாக பயன்படுத்துவோம்...! மேலதிக பேருந்துகளை பெற ஒத்துழைப்பு நல்குவோம்...!!

பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)
[email protected] | PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் | www.x.com/PNO_PNS

Address

Bus Stand, Parangipettai
Chidambaram
608502

Website

Alerts

Be the first to know and let us send you an email when PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PortoNovo Payaniyar Nala Sangam - பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம்:

Shortcuts

Share