Sree Balaji Travels

Sree Balaji Travels Our Speciality is Tirupati Tour Packages. We have well planned Tirupati Tour Packages and we do cust

10/01/2024

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...

எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

🌼பிரம்மம்🌻அஉம் அகத்திய மாரிசி நம ☘🙇‍♂️அஉம் சற்குருவே நம 🌻பிரம்மத்தை பற்றி பகவான்ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அருமையான 4 கத...
15/11/2022

🌼பிரம்மம்🌻

அஉம் அகத்திய மாரிசி நம ☘🙇‍♂️
அஉம் சற்குருவே நம 🌻

பிரம்மத்தை பற்றி பகவான்
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அருமையான 4 கதைகள் 🌼

கதை 1:

ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

கதை 2:

புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

கதை 3:

ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

கதை 4:

நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

பரப்பிரம்மம்🌻

ஓர் அறையில் ஒரு மண்குடத்தை வைத்தால், குடத்தினுள் கட்டுண்டிருக்கும் ஆகாசமும், அறையினுள் கட்டுண்டிருக்கும் ஆகாசமும், வெளியே உள்ள ஆகாசமும் வேறுபட்டனவா? குடம் உடைந்து அறையின் சுவர்களையும் கூரையையும் நீக்கிவிட்டால், குடம், அறை இவற்றினுள் இருக்கும் ஆகாசமும், வெளி ஆகாசமும் வித்தியாசமில்லாமல் ஒன்றே ஆகிவிடுகின்றன அல்லவா? அதே போல் ஒன்றேயாகிய பேருண்மையான முழு முதற்பொருள்தான், உயிர்களின் உடலிலும் வெளியிலும், எங்கும் ஊடுருவிப் பரவி, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று அறிய வேண்டும். அதுதான் பரப்பிரம்மம்.
_ பகவத்கீதை.

ஒன்றுதான் அனைத்தும்🌼
அகம்ப்ரம்மாஸ்மி 🌼

ஒன்றில் மட்டுமே இருப்பது அனைத்திலும் இருக்காது. அனைத்திலும் இருக்கும் ஒன்றே ஒவ்வொன்றிலும் இருக்கும்.

ஒன்றில் மட்டுமே இருப்பதை வைத்து ஒன்றாக மட்டுமே உணரமுடியும். அனைத்திலும் இருப்பதை வைத்துதான் அனைத்துமாக உணரமுடியும்.

அனைத்தும் ஒன்றுதான்🌻
அயம் ப்ரம்மாஸ்மி 🌻

அஉம் பரப்ரம்மனே நமஹ 🌼🌻🙇‍♂️

11/11/2022

ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, உயிர் பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.

சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகை சுமந்து வந்தார்கள்.

அவர்கள் க‌ளைப்பாவது நியாயம்.

உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை
அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான், கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..

ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.

அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........
பாருங்க பதில்.

ஆஹா...

அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!**இன்று சொல்லி வணங்குவோம் .**யார் ஒருவர் தினமும் மேற்கண்ட* *ஸ்ரீநாராயணனின்...
06/06/2022

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*
*இன்று சொல்லி வணங்குவோம் .*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட* *ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்* *மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக* *இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.*

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*

*1.ஓம் கேசவாய நமஹ!*
*2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!*
*3.ஓம் நாராயணாய நமஹ!*
*4.ஓம் வாசு தேவாய நமஹ!*
*5.ஓம் மாதவாய நமஹ!*
*6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!*
*7.ஓம் கோவிந்தாய நமஹ!*
*8.ஓம் அனிருத்தாய நமஹ!*
*9.ஓம் விஷ்ணவே நமஹ!*
*10.ஓம் புருஷோத்தமாய நமஹ!*
*11.ஓம் மதுசூதனாய நமஹ!*
*12.ஓம் அதோஷஜாய நமஹ!*
*13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!*
*14.ஓம் லஷ்மி நரசிம்ஹாய நமஹ!*
*15.ஓம் வாமனாய நமஹ!*
*16.ஓம் அச்சுதாய நமஹ!*
*17.ஓம் ஸ்ரீதராய நமஹ!*
*18.ஓம் ஜனார்தனாய நமஹ!*
*19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!*
*20.ஓம் உபேந்த்ராய நமஹ!*
*21.ஓம் பத்மநாபாய நமஹ!*
*22.ஓம் ஹரயே நமஹ!*
*23.ஓம் தாமோதராய நமஹ!*
*24.ஓம் கிருஷ்ணாய நமஹ!*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்*

அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி த...
09/01/2022

அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி தீட்சிதர். அத்துடன், திருத்தணியில், முருகப் பெருமானே இவருக்கு காட்சியளித்து, வாயில் கற்கண்டு இட்டு அருள் புரிந்திருக்கிறார்.
செல்வத்தின் மீது பற்றில்லாமல், அம்பாள் அருளே, பெரும் செல்வம் என, இறை சிந்தனையில் வாழ்ந்திருந்தார், தீட்சிதர். ஆனால், அவர் மனைவியோ, 'அம்பாள் அருள் இவருக்கு பரிபூரணமாக இருக்கையில், இவர் போய் நின்றாலே போதுமே அரசர்கள் அள்ளிக் கொடுப்பரே... அதை வாங்கி வந்து, எனக்கு நகை, நட்டுகள் செய்து போடக் கூடாதா...' என, நினைத்தாள்.
ஒருநாள், தன் எண்ணத்தை தீட்சிதரிடம் கூறினாள். ஆனால், அவர் அம்பிகையின் நினைவில் ஆழ்ந்திருந்ததால், அதை செவி மடுக்கவில்லை. அதனால், அவரது சீடர் ஒருவர், 'குருநாதா... தாங்கள் அனைத்தையும் துறந்தவர்; அதனால், தங்களுக்கு வேண்டுமானால் எதுவும் தேவையிருக்காது. ஆனால், தங்கள் மனைவி அப்படியில்லையே... அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடாதா... ஒருமுறை தஞ்சாவூர் அரசரை, தாங்கள் போய் பார்த்தாலே போதுமே... குரு பத்தினி வேண்டுவதெல்லாம், குறைவில்லாமல் கிடைத்து விடுமே...' எனக் கூறினார்.
அதற்கும் பதில் சொல்லவில்லை, தீட்சிதர். அன்றிரவு, நவாவரணப் பூஜை முடித்து, வழக்கம் போல, பாடத் துவங்கினார், தீட்சிதர்.
இந்நிலையில், அவரது மனைவி கனவில், சர்வ அலங்கார பூஷிதையாக தோன்றிய லட்சுமி தேவி, தன் திருமேனியில் இருந்து, ஒவ்வொரு ஆபரணமாக கழற்றி, தீட்சிதரின் மனைவிக்கு அணிவித்தவள், 'போதுமா... இன்னும் வேண்டுமா...' எனக் கேட்டாள்.
மெய் சிலிர்த்து, விழித்தெழுந்தாள், தீட்சிதரின் மனைவி. நகை மேல் அவளுக்கு இருந்த நாட்டமும் கலைந்தது.
அம்பிகையை துதித்து, தீட்சிதர் பாடிய கீர்த்தனைகள், இன்றும், கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகின்றன.
இறையருள் பெற்றவர்களின் உள்ளம், வேறெதிலும் பற்றாது என்பதை விளக்கும் வரலாறு இது!

_*கதையல்ல  நிஜம்*_பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.ஆனால் அன்றைக்கோ வ...
20/11/2021

_*கதையல்ல நிஜம்*_

பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.

ஆனால் அன்றைக்கோ வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்.

நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் போயிருந்தேன்.

உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.

இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.

அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்.

அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்தப் பையனை கண்டிக்கிறார்.

பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது.

தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.

குழந்தை அழத் தொடங்குகிறது.

ஒரு‌பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.

ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.

அந்தக் கோயிலை ஒட்டியுள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்கிறான்.

பொழுதடைய கோவிலைச் சாத்த குருக்கள் வரும்போது குழந்தையின் முனங்கல் கிணற்றுக்குள் லிருந்து கேட்க குருக்கள் எட்டிப்பார்க்கிறார்.

குழந்தை யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் சேர்ந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்.

போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.

ஒரு மணிநேரத்தில் காவல்துறை பெற்றோரைக் கண்டுபிடிக்கிறது.

குழந்தையைக் காணவில்லை என்று யாராவது புகார் கொடுத்து
இருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து ஒரே மணிநேரத்தில் நெல்லை போலீஸ் மதுரையில் இருக்கும் பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள்.

இரவோடு இரவாக பெற்றோர்கள் நெல்லை வந்து சேர்கிறார்கள்.

அடுத்த நிமிஷமே குற்றவாளியை கைது செய்கிறது நெல்லை காவல்துறை.

காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அப்புறமாக சட்டரீதியான நடவடிக்கைக்குப் பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவே அந்தக் கூட்டம்.

தன்னைக் காப்பாற்றிய அந்த யானைப் பொம்மையை இடுக்கிப் பிடித்தபடியே குழந்தையை ஒரு பெண்காவலர் கொண்டுவந்தார்.

ீஅதைப் பார்த்ததும் அந்தத் தாய் அழுத அழுகை அனைவரின் கண்களும் பனித்தன.

தெய்வீகக் குழந்தை என்றார் நீதிபதி.

எருமை வாகனத்தில் வந்து குழந்தையின் உயிரைப் பறிக்க முயன்ற எமன் தோற்றுப் போனான்.

காரணம் குழந்தை யானையிடமல்லவா இருக்கிறது.

யானையை ஜெயிக்க எருமையால் முடியுமா .

_*கிளைமாக்ஸ்*_ :-

வழக்கமாக அந்தக் கோவிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளும் செவிடாம்.

அன்றைய தினம் திடீர் உடல்நலக் கோளாறினால் தன்னுடைய மருமகனை அனுப்பியிருக்கிறார்.

அந்த காதுகேளாத குருக்கள் அன்றைக்கு வந்திருந்தால் குழந்தையின் முனங்கல் கேட்டிருக்காது.

குழந்தை இரவுமுழுக்க தண்ணீரில் மிதந்து விறைத்து இறந்திருக்கும்.

_*புரிந்துகொள்ளுங்கள்*_
_*இதற்குப் பெயர்தான் கடவுள் என்பது.*_

"கண்டகி நதி "...........................தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்...
15/09/2021

"கண்டகி நதி "...........................

தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது.

அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள்.

இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை.

ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான்.
வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.

உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள்.

உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.

இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.

திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது.

இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார்.
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார்.

கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது.

அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார்.

சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான் சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.

ஒரு  #பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்! ஒரு நாள் அந்த பெண் பூசாரி கிட்ட சொன்னாள், இனி  நான் கோவிலுக்கு வரமாட்டேன்!அர்ச...
28/08/2021

ஒரு #பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்! ஒரு நாள் அந்த பெண் பூசாரி கிட்ட சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன்!

அர்ச்சகர் கேட்டார் -- ஏன்?

அப்போது அந்தப் பெண் சொன்னார் -- கோயில் வளாகத்தில் மக்கள் செல் போனில் எதைப்பற்றியோ பேசுவதை நான் பார்க்கிறேன்! கிசுகிசுக்கும் இடமாக கோயிலை சிலர் தேர்வு செய்துள்ளனர்! சிலர் பாசாங்குத்தனம் குறைவாக வழிபடுகிறார்கள், அதிகம் பாசாங்கு செய்கிறார்கள்!

இதில் அர்ச்சகர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார், பிறகு சொன்னார் -- சரி! ஆனால் நீங்கள் உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நான் சொல்வதை செய்ய முடியுமா!

பெண் சொன்னாள் - சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்?

அர்ச்சகர் சொன்னார் -- ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் நிரப்பி 2 முறை கோவில் வளாகத்திற்குள் வலம் வர வேண்டும். ஆனால் தண்ணீர் தளும்பி கீழே விழக்கூடாது என்பதுதான் நிபந்தனை !

பெண் சொன்னாள் -- என்னால் இதைச் செய்ய முடியும்!

பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணும் இதையே செய்தார்! அதன்பிறகு கோவில் அர்ச்சகர் பெண்ணை 3 கேள்விகள் கேட்டார் -

1. கையில் கண்ணாடி குவளையில் நீர் கொண்டு வலம் வரும்போது யாராவது செல்போன் பேசுவதை நீங்கள் பார்த்தீர்களா ?

2. கோவிலில் யாராவது கிசுகிசுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

3. யாராவது பாசாங்குத்தனம் செய்வதை நீங்கள் பார்த்தீர்களா?

பெண் சொன்னாள் -- இல்லை நான் எதையும் பார்க்கவில்லை!

அப்பொழுது அர்ச்சகர் சொன்னார் --- நீங்கள் வலம் வரும் போது உங்கள் கவனமெல்லாம் கண்ணாடி குவளை மீதுதான் இருந்தது அதனால் தண்ணீர் சிந்தாதபடி உங்கள் கவனம் இருந்ததால் நீங்கள் வேறு எதையும் கவனிக்க இயலவில்லை.

*இனி கோவிலுக்கு வரும்போதெல்லாம் தெய்வம் மீது மட்டும் கவனம் வையுங்கள் அப்போது எதையும் காண முடியாது எங்கும் தெய்வம் மட்டுமே தெரியும்

www.sreebalajidarshan.com

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள!!நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் த...
28/07/2021

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!

விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள!!

நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும்
போக்க வல்ல மருந்து
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.

72- பூகர்பாய நமஹ (Bhoograbhaaya namaha)

மதுரையை ஆண்ட ராஜசேகரப் பாண்டியன், தீவிர சிவபக்தன்.

அவன் பரதநாட்டியக் கலையைத் தவிர மீதமுள்ள
63 கலைகளிலும்
தேர்ச்சி பெற்று விளங்கினான்.

இறுதியில் பரதக்கலையையும் கற்க முற்பட்டபோது, அவனுக்குக் காலில் கடும்
வலி உண்டானது.

“ஒருநாள் பரதம் ஆடும் நமக்கே இவ்வளவு வலி உண்டாகிறதே. நடராஜர் எப்போதும் இடக்காலை மேலே தூக்கியபடியும்,
வலக்காலைக் கீழே ஊன்றியபடியும் நாட்டியம் ஆடிக்கொண்டே இருக்கிறாரே, அவருக்கு எவ்வளவு வலிக்கும்!” என்று எண்ணினான்.

உடனே சிவனிடம் சென்று,
“நின்றதாள் எடுத்து வீசி எடுத்த தாள் நிலம்மீது ஊன்றி
இன்றுநான் காண மாறி ஆடி என் வருத்தமெல்லாம்
பொன்று மாசெய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்றனான் சுரிகை வாள்மேல் குப்புற வீழ்வேன் என்னா”
என வேண்டினான்.

அவனுடைய பக்தியை மெச்சிய சிவனும், இடக்காலைக் கீழே ஊன்றி, வலக்காலை மேலே தூக்கி மாற்றி
ஆடிக் காட்டினார் என்ற வரலாறு போலவே வைணவத்திலும் ஒரு வரலாறு உண்டு.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது “திரு இட எந்தை (திருவிடவெந்தை)” என்னும் திவ்ய தேசம்.

அங்கே தனது இடது தோளில் பூமிதேவியை ஏந்தியபடி வராகப் பெருமாள் தரிசனம் தருகிறார்.

இங்குள்ள உற்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம்.

மாமல்லபுரத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்த அரிகேசரி என்ற பல்லவ மன்னர் திருவிடவெந்தை வராகரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் மாமல்லபுரத்தில் இருந்து வராகரைத் தரிசிக்க திருவிடவெந்தைக்கு
மன்னர் வருகையில், தம் குதிரையை இரண்டு முறையாவது மாற்றுவார்.

ஏனெனில் ஒரே குதிரையால் அவ்வளவு தூரம் மன்னரைச் சுமந்து செல்ல முடியவில்லை என்பதுதான்!

ஒருமுறை வராகனிடம் மன்னர், “எம்பெருமானே என் குதிரையால் சில மணிநேரங்கள் கூட என்னைச் சுமக்க முடியவில்லை.

ஆனால் நீ உன் மனைவியான பூமிதேவியை உன் இடது தோளில் சுமந்து கொண்டே இருக்கிறாயே, உனக்கு வலிக்காதா?
இடது தோளிலிருந்து மாற்றி வலது தோளில் அவளை நீ சுமக்கலாமே!” என்று கேட்டார்.

அதற்கு விடையளித்த வராகர், “பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பத்து மாதம் கருவில் சுமக்கிறார்களே!
அவர்களுக்கு அப்போது எவ்வளவு வலி உண்டாகும்.

அவர்களால் குழந்தையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்துக் கொள்ளவும் முடியாதே.

எனினும் தாயுள்ளத்தால் வலியைப் பொறுத்துக்கொண்டு குழந்தையைச் சுமக்கிறார்கள் அல்லவா?

அதுபோலவே உலகுக்கெல்லாம் தாயான பூமிதேவி எப்போதும் அனைத்து உலகங்களையும் உயிர்களையும் பாரமாகக் கருதாமல் தன்மேல் சுமந்து கொண்டே இருக்கிறாள்.

அந்தப் பெண்மையின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்தவே
அனைத்துலகுக்கும் அன்னையான பூமிதேவியை நான் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறேன்!

இதில் எனக்கு எந்த வலியும் வேதனையும் இல்லை!” என்றார்.

“எம்பெருமானே! வலியும் வேதனையும் உனக்கு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இந்நிலையில் உன்னைக் காணும்
உன் பக்தனான அடியேனுக்கு ஏற்படுகின்றதே.

நீ இந்தக் கோலத்திலேயே தொடர்ந்து இருந்தால் இனி திருவிடவெந்தைக்கு வந்து உன்னைக் காண என் மனம்
இடம் கொடுக்காது!” என்றார் மன்னர்.

“அப்படியாயின் நீ என்னைத் தேடி இவ்வூருக்கு வர வேண்டாம். உன் பக்திக்கு உகந்து உனது ஊரான மாமல்லபுரத்திலேயே
பூமிதேவியை என் வலது தோளில் சுமந்தபடி உனக்குக் காட்சி தருகிறேன்!” என்றார் வராகர்.

மாமல்லபுரத்திலேயே வலதுதோளில் பூமிதேவியை ஏந்தியபடி அரிகேசரிக்குக் காட்சியளித்தார்.

எம்பெருமான் தன் இடது தோளில் பூமியைச் சுமந்த க்ஷேத்ரம் திருவிடவெந்தை என்றழைக்கப்பட்டது போல,

அரிகேசரி மன்னருக்காக வலது தோளில் பூமியைச் சுமந்தபடி காட்சி தந்த க்ஷேத்ரம் திருவலவெந்தை என்று பெயர் பெற்றது.

மாமல்லபுரத்திலுள்ள அந்தத் திருக்கோவிலில் திருவிடவெந்தை பெருமாளின் கண்ணாடிப் பிரதிபிம்பம் போல
வலது தோளில் பூமிதேவியுடன் திருமால் காட்சி தருகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து அவர்களைச் சுமப்பவள் பூமிதேவி.

அந்த பூமிதேவியை
எப்போதும்
தன் தோள்களில் சுமந்திருப்பதால் திருமால் ‘பூகர்ப:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 72-வது திருநாமம்.

“பூகர்பாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளத்திலுள்ள பாரங்களை எல்லாம்
எம்பெருமான் போக்கியருளுவான்.

சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது    இராம நாமத்தைஉச்சரித்து கொண்டு வந்தார்.பார்வதி தேவி, எம்பெருமானைப...
15/07/2021

சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது

இராம நாமத்தை
உச்சரித்து கொண்டு வந்தார்.

பார்வதி தேவி, எம்பெருமானை
பார்த்து கேட்டாள், “ சுவாமி, நீரே எல்லோருக்கும் மேலான கடவுள் - அப்படியிருக்க நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்
சிவன், அதற்கு பதில் சொல்கிறார்

” தேவி, 'ராம' என்ற எழுத்து இரண்டு
விஷயங்களை குறிக்கிறது. ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது.

இராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம்.

நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“

இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.

சிவன் சொன்னார்.

" தேவி, கவலை வேண்டாம்.

பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதிதான்.

மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்

பார்வதியும் சமாதானமாகி
சுவாமியுடன் அவர் எடுக்கப் போகும் அவதாரத்தை பற்றி
விவாதிக்க தயாரானாள்.

பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது

ஏன், குரங்கு அவதாரம்*?
பரமேஸ்வரன் விளக்குகிறார்.

” மனிதனாக அவதாரம் எடுத்தால்,

அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.

எஜமானனை விட சேவகன் ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது.

குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது.

நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்

பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள்.

சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார்.

( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).

பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள்.

“ சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன்
நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு உதவ முடியும்? ”,
என்று கேட்டாள்

சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? இராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.

இராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.

ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.

விஷ்ணு அம்சமான ராமரும்,
சிவ அம்சமான அனுமானும்- நம்மை எல்லோரையும் காப்பாற்ற,
வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.

படித்ததில் பிடித்தது.

Ranga Mandapam inside Tirumala temple.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Once you enter the temple, you will find this Mandapam ...
05/07/2021

Ranga Mandapam inside Tirumala temple.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Once you enter the temple, you will find this Mandapam on your left. This Mandapam was constructed in 1310-1320 AD by Sri Ranganatha Yadava Raya.

Once the Utsava Murthies of Sri Ranganadha Swamy of Srirangam were offered worship here from 1320-1360 AD. This was to safeguard the idol from destruction when Srirangam was invaded.

It was built in Vijayanagara style architecture and decorated with floral carvings and tales and stories from Ramayana and other Puranas on the pillars, walls, and ceiling.

Snapana Tirumanjanam during the annual brahmotsavams is held here. Earlier Kalyanotsavams were also performed here.

Naivedyam presented to the Lord is now being prepared from products grown in organic farming with Cow based farming inpu...
05/07/2021

Naivedyam presented to the Lord is now being prepared from products grown in organic farming with Cow based farming inputs.

Address

No. 129, College Road, Nanganallur
Chennai
600061

Alerts

Be the first to know and let us send you an email when Sree Balaji Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sree Balaji Travels:

Share

Category