Chennai serching"

Chennai serching" this is new creative product selling page

31/01/2017
30/01/2017

அன்புடன் அழைக்கின்றோம்
நாள் 4-2-17 மாலை 4 மணிக்கு
இடம்; 20,வியாசர் தெரு, தி. நகர், சென்னை 17. (முருகன் இட்லிக்கடை அருகில்)

நன்மக்களே! தற்போதைய இந்திய தேர்தல் முறையானது தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தான் சார்ந்த கட்சிக்கும் தான் சார்ந்த கட்சியின் தலைமைக்கும் விசுவாசமாகவும் அடிமையாகவும் இருக்கும் மக்களை பற்றிய அக்கறையின்மையான உறுப்பினர்களை தேர்வு செய்யும் கட்டாயத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் மக்களுக்கு நலன் என்பதை விட கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் நன்மை இருக்குமா? என்ற நிலையிலேயே தனது கடமையை செய்கின்றார்.

ஒரு குடிமகன் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்முறையானது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைவருக்கும் சம உரிமை எனும் அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிராக உள்ளது.

அரசியல் கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னமானது பல ஆண்டுகளாக மக்களிடம் விளம்பரம் செய்யப்பட்டு நிரந்தர சின்னமாக பயன்படுத்துவதும் சாமானியர்கள் தங்களுக்கான சின்னங்களை பெற்று அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்ய மிக்க குறைந்த நாட்கள் மட்டுமே அவகாசம் இது எப்படி போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பாக இருக்க முடியும்?

இதுபோன்று பல நடைமுறைகள் மக்களின் விசுவாசியான உறுப்பினர்களை தேர்வு செய்ய தடையாக உள்ளது ஆகவே, தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை என்ற கோரிக்கையைஅவசியமாகிறது.

உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தத்தில் அமேரிக்கா கொண்டுவந்துள்ள ஆபத்தான திருத்தங்களை அப்படியே ஏற்று இந்தியா கையொப்பம் இட்டு ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த விவசாய ஒப்பந்தம் முழுவீச்சில் செயல்படும்பொழுது விவசாயம் இருக்கும் விவசாயிகள் இருக்கமாட்டார்கள். கிராமங்கள் இருக்கும் கிராமத்தில் மக்கள் வாழ இயலாது. விவசாயிகள் அனைவரும் அருகாமை நகரத்தில் குடியேற்றம் செய்யப்படும் நிலையால் நகரத்தில் வேலையிழப்பு நெருக்கடி காரணமாக கொலை கொள்ளை பெருகும்.

ஒப்பந்தப்படி இந்திய விவசாய விளைபொருட்கள் விலை நிர்ணயம் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பல மடங்கு விலையில் உணவுப்பொருட்கள் விலையேற்றம் ஏற்படும் ஆபத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து பசி பட்டினியால் திருட்டு, வழிப்பறி, கொலை கொள்ளை பெருகும் ஆபத்தும் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமையாகிக் கிடக்கிறது. மக்கள் அனைவரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் அடிமைகளாகி எதிர்த்துக் கேள்விகேட்கும் திராணியற்ற இயந்திரங்களாக்கிவிட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு இருக்கும் மக்களை மீட்க தற்போதைய கட்சி அரசியல் பயன்தராது. மக்கள் அரசியல் ஜனநாயக அரசியல் வேண்டும். கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக நடந்துகொள்ளும் உறுப்பினர்களை உருவாக்காமல் நாட்டு மக்களின் நலனுக்காக உண்மையில் பங்காற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் தற்போதைய தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் தேவை.

ஆகவே அண்ணா ஹசாரே அவர்களின் ஆலோசனைப்படி IACVA ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு 20, வியாசர் தெரு திநகர் சென்னையில் நடைபெற உள்ளது.

தொலைநோக்கு பார்வையுடன் நமது சந்ததிகள் நலன்வேண்டி அண்ணா ஹசாரே அவர்களின் ஆதரவாளர்களும் சமூக ஆர்வலர்களாகிய தாங்களும் தங்களது சகா நண்பர்களுடன் கலந்து கொண்டு மக்கள் நலனுக்கான தேர்தல் நடைமுறையை உருவாக்கும் பொருட்டு நடைபெறும் அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்திற்கு தங்களின் ஆதரவுடன் நல் ஆலோசனைகளையும் வழங்கிட வருகை தந்திட வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்
பிடிச்சிருந்தா ஒரு லைக் கொடுத்து IACVA உடன் இணைந்திடுங்கள்
https://www.facebook.com/iacvatn

- IACVA தமிழ்நாடு
9444305581

22/01/2017
19/01/2017

முடியும் முடியும் என்ற வார்த்தைதான் இமயத்தை மிரட்டுமே
விடியும் விடியும் என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே
முடியாது என்றொன்று கிடையாது பூமியில்
நடக்காது என்றொன்று இருக்காது உண்மையில்
வெல்லும் வரையில் தொட்டுத்தொடரும் சோதனை
யாரும் செய்யாததை செய்தால்தானே சாதனை சாதனை

12/01/2017

உளுந்தங்கஞ்சி தினமும் மாலை 3 முதல் 8 வறை விலை 5 ரூ கிடைக்கும் மிடம் அம்பத்தூா் இரயில் நிலலையம் எதிரில் சாய்பாபா ஆலையம் எதிரில்

சென்னையின் வரலாறுகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.1909 இல் மதராசுசென்னை (Chennai) என்பது இந்தியாவிலுள்...
06/01/2017

சென்னையின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1909 இல் மதராசு
சென்னை (Chennai) என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8.9 மில்லியன் மக்கள் தொகை உடையது. இது 400 ஆண்டுகள் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே 31 ஆவது பெரிய பெருநகரப் பகுதி ஆகும்.
தென் இந்தியாவின் பண்டைய பகுதி
முதலில் மதராசபட்டிணம் என அழைக்கப்பட்ட சென்னை, நெல்லூரிலுள்ள பெண்ணையாறு மற்றும் கடலூர் பெண்ணையாறு நதிகள் இடையே, தொண்டைமன்டல மாகாணத்தில் அமைந்திருந்தது. அப்போது காஞ்சி மாகாணம் (காஞ்சிபுரம்) இதன் தலைநகரமாக இருந்தது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தொண்டைமன்டலம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சோழ வம்சத்தின் பிரதிநிதியாக இருந்த தொண்டைமான் இளந்திரையனால் ஆட்சி செய்யப்பட்டது. இவன், தொண்டைமன்டலத்தின் ஆதி குடிகளான குரும்பர்களை அடக்கி தொண்டைமன்டலத்தில் தன் ஆட்சியை நிலைநாட்டியதாக நம்பப்படுகிறது.
புனித ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானியர் (British) குடியேற்றம் காரணமாகவும், அதன் பின்னர் பல கிராமங்களை இணைத்து செய்யப்பட்ட விரிவாக்கம் மற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி குடியேறிய ஐரோப்பியர்களின் காரணமாகவும் நவீன "சென்னை" நகரம் உருவானது. ஐரோப்பியர்களால் பெரும்பாலான சென்னை நகரம் கட்டப்பட்டிருந்தாலும், இதனைச் சுற்றியுள்ள பகுதியிகளில் பின்னர் செய்யப்பட்ட விரிவாக்கதில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் திருவான்மியூர் திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, திருமயிலை (மயிலாப்பூர்) கோயில்கள் இணைக்கப்பட்டன.
திருவான்மியூர், திருவொற்றியூர் மற்றும் திருமயிலை மூவர்களின் (நாயன்மார்) தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கையில், திருவல்லிக்கேணி ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சோழ மற்றும் பல்லவ சாம்ரஜ்யம்
இளந்திரையனுக்குப் பிறகு, இந்தப் பகுதி சோழ இளவரசன் இளங்கிள்ளியால் ஆளப்பட்டு வந்தது.
இரண்டாம் புலிமாயியை (Pulumayi II) அரசானாகக்கொன்ட ஆந்திர சாதவாகனர்களின் ஊடுருவல்களால் தொண்டைமன்டலத்தில் சோழர்களின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் பகுதியை கவனிக்க தலைவர்களை நியமனம் செய்தனர். மூண்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதவாகனர் பேரரசின் கீழ் காஞ்சிபுரம் இருந்தபோது, அதன் தலைவனாக கருதப்பட்ட பப்பசுவாமி, ஏற்கனவே காஞ்சிபுரத்தில் (சுற்றியுல்ல ஒரு நிலப்பகுதிக்கு) ஒரு தலைவனாக இருந்தவன். அதுவரை சாதாரன இராஜப்பிரதிநிதிகளாக இருந்த பல்லவர்கள், பின்னர் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் சுதந்திரமான அரசர்களாக மாறினர்.

சென்னை (Chennai) என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[1] இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8.9 மில்லியன் மக்கள் தொகை உடையது. இது 400 ஆண்டுகள் பழமையான…

25/11/2016

சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி ? அடுத்தவருவதை அறிய ஆர்வமா!
admin | November 16, 2016 | Jothidam | 13 Comments
வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….

எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…

எத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…

astro

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன:

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி அட்டவணைப்படி பெயர்ச்சி நிகழ்ந்து வருகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். தற்போது கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது.

மீனம்
12

மேஷம்
1

ரிஷபம்
2

மிதுனம்
3

கும்பம்
11

ராசிக்கட்டம் கடகம்
4

மகரம்
10

சிம்மம்
5

தனுசு
9

விருச்சிகம்
8

துலாம்
7

கன்னி
6



சனி சஞ்சாரம்
ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.

அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.

4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

3ல் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.

4ல் இருந்தால் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.

5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.

7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.

சனி வகைகள்
ஏழரைச் சனி:பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்

மங்கு சனி:இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.

பொங்கு சனி:வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்

தங்கு சனி:பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.

மரணச் சனி:நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்

சனிபகவான் குறித்த சில தகவல்கள்
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் ‘வட திருநள்ளாறு’ என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்
சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். “உன் பக்தர்களை அண்டமாட்டேன்” என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.
சனி பகவான் கிரகஸ்துதி
நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

24/10/2016

Community

24/10/2016

this page all ambattur pepule connecting place

24/10/2016

* அன்பார்ந்த பெற்றோர்களே!*
*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*
*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*
*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*
*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*
*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.*
*அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்*
*அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*
*ஒரு இசைஞானி இருப்பான்*
*அவனுக்கு இரசாயனவியல் அவசியமிராது.*
*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்*
*அவனது உடல் நலனே முக்கியமன்றி*
*பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*
*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*
*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*
*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*
*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*
*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள்..
பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*
*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*
*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

Address

Raveendranath Street
Chennai
600053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai serching" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share