தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் service oriented business milk. so milk dealers welfare onely "தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்."

சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகம், உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் நலன், வாழ்வாதாரத்திதற்காக போராடும் அமைப்பு தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

https://youtu.be/Cfr_LNk_bUc?si=byCsTTLweAP342IO
11/08/2026

https://youtu.be/Cfr_LNk_bUc?si=byCsTTLweAP342IO

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பா...

இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி பாதிப்பு,தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்*நட...
08/07/2026

இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி பாதிப்பு,

தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

*நடப்பாண்டில் 2வது முறையாக தனியார் நிறுவன பால், தயிர் விற்பனை விலை லிட்டருக்கு 4.00ரூபாய் உயர்வு.* நாளை (09.07.2026) முதல் அமுலுக்கு வருகிறது.

பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய பெருமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

நடப்பாண்டு தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய கோடைகால பருவமழை பொய்த்துப் போனதாலும், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களுக்கிடையே பால் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தங்களின் பால் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கி வருவதோடு, பால் கொள்முதலுக்கேற்ப விவசாய பெருமக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கி வருவதால் தமிழ்நாடு அரசின் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட ஆவினுக்கு வழங்குவதை குறைத்துக் கொண்டு தனியாருக்கு பால் வழங்கத் தொடங்கியுள்ளதால் கடந்தாண்டு திமுக ஆட்சியில் இருந்தே ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 25லட்சம் லிட்டராக சரிந்தது தற்போது வரை அது உயரவே இல்லை.

மேலும் கடந்தாண்டு இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் பாலுக்கான கொள்முதல் விலையை ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி வழங்கி வருவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்தின.

இந்த நிலையில் ஏற்கனவே மேற்காசியாவில் நிலவிய போரினால் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அதனால் வாகன எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பால் பொருட்கள் உற்பத்திக்கு தேவையான பல்வேறு மூலப் பொருட்களின் விலையும், பால் கொள்முதல், விநியோக வாகனங்களுக்கான வாடகையும் கடுமையாக உயர்ந்து போனதாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொடுத்து வருவதாலும் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை (வியாழக்கிழமை 09.07.2026) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் உயர்த்துவதோடு, பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கான கமிஷன் (லாபம்) தொகையையும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

அதன்படி 500மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 29.00ரூபாயில் இருந்து 31.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 35.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 39.00ரூபாயில் இருந்து 41.00ரூபாயாகவும், 1000மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 54.00ரூபாயில் இருந்து 57.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 66.00ரூபாயில் இருந்து 69.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 73.00ரூபாயில் இருந்து 76.00ரூபாயாகவும், 500கிராம் ஹட்சன் தயிர் 42.00ரூபாயில் இருந்து 44.00ரூபாயாகவும், ஆரோக்யா தயிர் 40.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும் விற்பனை விலை உயர்வு ஜூலை 9ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

முன்னணி தனியார் பால் நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வினை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்தடுத்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவில் இருக்கின்றன. தனியார் பால் நிறுவனங்களின் தவிர்க்க முடியாத இந்த விற்பனை விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஆரோக்யா நிறுவனம் விற்பனை விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அநநிறுவனத்தை கேட்டுக் கொள்கிறது.

மேலும் கோடைகால பருவமழை பொய்த்துப் போனதால் வரும் மழைக்காலத்தில் கூட மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்,

கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட "விலையில்லா கறவை மாடுகள் திட்டம்" தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ததோடு, 2020-2021ம் நிதியாண்டில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 43லட்சம் லிட்டர் வரை உயர காரணமாக இருந்தது. ஆனால் 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அந்த திட்டத்தை கைவிட்ட காரணத்தால் ஆவினுக்கான பால் கொள்முதல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

எனவே தமிழ்நாட்டில் வரும் மாதங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உடனடியாக விவசாய பெரு மக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி, கால்நடைகளுக்கான தீவனம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை கவனத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதற்கேற்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலை, விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இணைப்பு :- ஆரோக்யா பால் விற்பனை விலை உயர்வு சுற்றறிக்கை நகல்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
08.07.2026 / காலை 9.45மணி.

இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி பாதிப்பு,தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்*நட...
08/07/2026

இந்தியா முழுவதும் தொடரும் வரலாறு காணாத பால் உற்பத்தி பாதிப்பு,

தமிழ்நாட்டில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

*நடப்பாண்டில் 2வது முறையாக தனியார் நிறுவன பால், தயிர் விற்பனை விலை லிட்டருக்கு 4.00ரூபாய் உயர்வு.* நாளை (09.07.2026) முதல் அமுலுக்கு வருகிறது.

பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய பெருமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

https://x.com/i/status/2074707613716217891

*Distributor & Dealers Wanted.*சென்னை & சென்னை புறநகர் பகுதிகளில் உயர்தரமான MD Dairy பால், தயிர் விற்பனை செய்ய ஏரியா வார...
05/07/2026

*Distributor & Dealers Wanted.*

சென்னை & சென்னை புறநகர் பகுதிகளில் உயர்தரமான MD Dairy பால், தயிர் விற்பனை செய்ய ஏரியா வாரியாக அழைக்கிறோம்.

தொடர்புக்கு 7299406066 / 9360331725

*Equity Share Holders Invited.*தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள  *பால் மு...
12/04/2026

*Equity Share Holders Invited.*

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள
*பால் முகவர்களின் கூட்டுறவு பால் நிறுவனமான MD Dairy பால் நிறுவனத்தில் பங்கு முதலீட்டாளர்களாக (Equity Share Holder) இணைய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

தற்போதைய 2026-2027 நிதியாண்டில் ஒரு
*பங்கு மதிப்பு Equity Share* (15.00 × 5000Nos) *Per Equity Share Amount 75000.00.* ஆகும்.

MD Dairy நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக *பால் முகவர்கள் மட்டுமின்றி தொழில் முனைவோராக விரும்பும் பிற துறை சார்ந்தோரும் எங்களுடன் இணையலாம்.*

Equity Share குறைந்த அளவே உள்ளதால் *முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.* என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

தமிழ்நாடு முழுவதும் பால் விநியோக தொழிலில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனை காத்திடும் உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு பா...
24/01/2026

தமிழ்நாடு முழுவதும் பால் விநியோக தொழிலில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனை காத்திடும் உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களான 200 பால் முகவர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள கூட்டு உறவு பால் நிறுவனமான "பால் முகவர்கள் பால் பண்ணை" (MD Dairy) "பால் பொருட்கள் அறிமுக விழா" ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) சென்னை கொளத்தூரில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் சுமார் 18ஆண்டுகளுக்கும் மேலாக பால் முகவர்களுக்கான கோரிக்கைகளை முன் வைத்து வந்தும் செயல்படுத்த எவருக்கும் மனமில்லாத நிலையில் பால் விற்பனை விலைக்கேற்ப வருமானமும் உயர சதவிகித அடிப்படையில் கமிஷன், மாதாந்திர ஊக்கத்தொகை, வங்கி டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய ஆண்டு முழுவதும் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் பால் முகவர்களின் உழைப்பை அங்கீகரிக்க ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கி பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை காத்து பால்வளத்துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட இருக்கிறது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பால் முகவர்களின் கூட்டு உறவு நிறுவனமான MD Dairy என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

மேலாண்மை இயக்குநர்
TNMDEWA DAPPL
பால் முகவர்களின் கூட்டு உறவு பால் நிறுவனம்.
25.01.2026 / காலை 4.30மணி.

https://x.com/i/status/2015197667253714993

20/12/2025

*விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டு, வரும் 2026 ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கும் *கூட்டு உறவு பால் நிறுவனத்தின் (TNMDEWA DAPPL) தலைமை* (சென்னை, கொளத்தூர்) *அலுவலகத்தில் பணியாற்ற* Taly, Excel மற்றும் *CRM* ல் அனுபவம் உள்ள *கணக்காளர் (Accountant),* காசாளர் (Cashier), அலுவலக பொறுப்பாளர் (Office Incharge) மற்றும் *பால் விநியோக பொறுப்பாளர் (Despatch Incharge)* பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பொறுப்பிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தங்களின் விண்ணப்பத்துடன் தங்களைப் பற்றிய சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய *மின்னஞ்சல் முகவரி [email protected]*

*பின் குறிப்பு :-* கணக்காளர் (Accountant) பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர் ஜனவரி முதல் வாரத்தில் பணியில் சேர வேண்டும்.

*ஆ.பொன்னுசாமி*
தலைவர் & நிர்வாக இயக்குநர்
*TNMDEWA Dairy and Agro Products Private Limited.*
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 095661 21277

*"பால் முகவர்களால் பால் முகவர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு பால் நிறுவனம்."* "பால் முகவர்களே கூட்டுறவு பால் நிறுவனத்...
17/12/2025

*"பால் முகவர்களால் பால் முகவர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு பால் நிறுவனம்."* "பால் முகவர்களே கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள்."
-வாய்ப்பு வழங்க *நாங்க ரெடி..!,* பயன்படுத்திக் கொள்ள *நீங்க ரெடியா..?*

அன்பிற்கினிய பால் முகவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு MCA எனப்படும் Ministery of Corporate Affairs ல் முறையாக பதிவு செய்து, தொடங்கப்பட்டுள்ள, விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் நமது பால் முகவர்களின் கூட்டு உறவு பால் நிறுவனமானது *பங்குதாரர் நிறுவனம் (Partnership Company) இல்லை* என்பதை பால் முகவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில் இந்த கூட்டு உறவு பால் நிறுவனமானது இந்திய அரசின் நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 18ன் கீழ் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பால் முகவர்களை மட்டுமே உரிமையாளர்களாகவும் (Equity Share Holders), நமது சங்க கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விரும்பும் பால் முகவர்களில் (சங்க உறுப்பினர்) ஒருவருக்கு ஒரு பங்கு (Equity Share) மட்டுமே என்கிற அடிப்படையிலும் செயல்படக் கூடிய வகையில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமது கூட்டு உறவு *பால் நிறுவனத்தின் 1பங்குத் தொகை (Equity Share Amount) 50ஆயிரம் ரூபாய் என முடிவு* செய்து அதனை *பால் முகவர்களிடமிருந்து மட்டும் (TNMDEWA Members Only)* முதலீடாக பெற்று, பால் கொள்முதல், உற்பத்தி, விற்பனை பிரிவுகளில் *கூட்டுறவு அடிப்படையில் செயல்பட இருக்கும் பால் முகவர்களின் கூட்டு உறவு நிறுவனமாகும்.*

எனவே *பால் முகவர்களால், பால் முகவர்களுக்காக..!* தொடங்கப்பட்டுள்ள நமது சங்க *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இணைய விருப்பம் உள்ள பால் முகவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.* *இன்னும் குறைந்த இடங்களே உள்ளது* என்பதால் *முதலில் வரும் பால் முகவர்களுக்கே முன்னுரிமை* அளிக்கப்படும்.

நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த உத்தரவாதம்.*

*உரிமையாளர்கள்..!*
நமது சங்கத்தின் சார்பில் தொடங்கப்படும் *கூட்டுறவு பால் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பால் முகவர்கள் அனைவரும்* பங்கு முதலீட்டாளர்களாக (Equity Share Holder) இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் இந்த *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களே.!*

*லாபம் பகிர்வு..!*
ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் அனைத்து உரிமையாளர்களுக்கும் 30% வருவாய் (Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

*கூடுதல் லாப பகிர்வு..!*
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக *பால்* மற்றும் *பால் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் (Equity Share Holders) உரிமையாளர்களுக்கு* ஆண்டுதோறும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட *நிகர லாபத்தில் இருந்து 10% வருவாய் கூடுதல் போனஸாக (Bonus Equity Dividend) பிரித்து வழங்கப்படும்.*

*பொறுப்பு..!*
"நாமே நிறுவனத்தின் உரிமையாளர்கள், நாமே பால் முகவர்கள், நாமே விற்பனை பிரதிநிதிகள்." என்பதால் இந்த கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சியில் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமல்ல, பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், புதிய, புதிய பால் முகவர்களை அறிமுகம் செய்தல் என *அனைத்து பொறுப்புகளும் உரிமையாளர்களான *பால் முகவர்கள் அனைவருக்கும் சரிசமமாகும்.*

*நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு..!*
நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து அதனை செவ்வனே செயல்படுத்த நமது *கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம்* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இயக்குநர் குழு தலைமையில் சென்னை கொளத்தூரில் உள்ள நமது கூட்டுறவு பால் நிறுவனத்தின் *தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.*

இக்கூட்டத்தில் முந்தைய மாதத்தின் பால் கொள்முதல் தொடங்கி, உற்பத்தி, நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை, அதன்மூலம் கிடைத்த தோராய வருவாய், கடந்த மாதத்தின் செலவுகள் நிறுவனத்திற்கு வரவேண்டிய கடன் தொகை வரை *அனைத்து விபரங்களும் வெளிப்படைத்தன்மையோடு கூட்டுறவு பால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அனைவரின் முன் சமர்ப்பிக்கப்படும்.*

*இலக்கு..! பாராட்டு..!! பரிசு..!!!*
அதன்படி நடப்பு மாதம் மற்றும் அடுத்த மாதம் முன்னெடுக்க வேண்டிய இலக்கு குறித்தும், பால் முகவர்கள் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் கூட்டுறவு பால் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதித்து *ஒவ்வொரு உரிமையாளர்களுக்கும்* (பங்கு முதலீட்டாளர்கள்) *இலக்கு நிர்ணயம்* செய்யப்படும்.

அவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் *இலக்கை அடையும் உரிமையாளர்கள்* (பங்கு முதலீட்டாளர்கள்) அடுத்த மாதம் நடைபெறும் உரிமையாளர்கள் (பங்கு முதலீட்டாளர்கள்) கூட்டத்தில் *பாராட்டி, பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.*

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள...

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277

எஸ்.பொன்மாரியப்பன் 9791072216
பொதுச் செயலாளர், TNMDEWA
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கிரி 9884375333
மாநில ஒருங்கிணைப்பாளர்
இணை நிர்வாக இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.முருகன் 9840009567
மாநில பொருளாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.சுரேஷ்குமார் 7299406066
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஜெ.அபுபக்கர் 9884056663
மாநில மக்கள் தொடர்பாளர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

ஆர்.கே.காண்டீபன் 9444708700
மாநில துணைத் தலைவர், TNMDEWA
இயக்குநர், TNMDEWA DAPPL

எஸ்.எம்.குமார், 8015265500
தலைமை ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

சொ.ராஜா, 9843412669
மாநில ஒருங்கிணைப்பாளர், TNMDEWA

Address

Chennai
600039

Telephone

09600131725

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்:

Shortcuts

Share