இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் இந்து முன்னணி பேரியக்கத்தின் ஒரு துறை. ஆட்டோ ஓட்டுநர்கள் தேசத்தின் பாதுகாவலர்கள். முகநூல் பக்கம்

தன்னம்பிக்கை ஒளி நிரப்பி! வலிமையான பாரதத்தின் புகழ்பரப்பி! பயணிப்போம் தேசத்தோடு!இந்து ஆட்டோ தொழிலாளர் நல சங்கத்தின் சார்...
14/08/2026

தன்னம்பிக்கை ஒளி நிரப்பி!
வலிமையான பாரதத்தின் புகழ்பரப்பி!
பயணிப்போம் தேசத்தோடு!

இந்து ஆட்டோ தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் 80-வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

 #இரங்கல்செய்திதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், இந்து ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாவட்ட துணைத் தலைவர் E.முனியப்பன் அவர்கள் இறை...
14/08/2026

#இரங்கல்செய்தி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், இந்து ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாவட்ட துணைத் தலைவர் E.முனியப்பன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்..

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் புதிதாக வேம்படி இசக்கி அம்மன் கோவில் அருகில் புதிதாக திறக்கப்பட்டது..இந்த நிகழ்ச...
08/08/2026

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் புதிதாக வேம்படி இசக்கி அம்மன் கோவில் அருகில் புதிதாக திறக்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளராக இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னணி சங்கத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கி லட்சுமி அவர்களும் கலந்து கொண்டு ஆட்டோ தொழிற்சங்கம் போர்டை திறந்து வைத்தனர்..

இந்து ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட, மாநகர மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி வெங்கடேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்..

#இந்துஆட்டோதொழிலாளர்கள்முன்னணிசங்கம்

05/08/2026

உயரப் போகும் ஆட்டோ கட்டணம்..

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கத்தின் கோரிக்கை ஏற்கும் அரசுக்கு நன்றி!!

13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் வேறு சில கோரிக்கைகளை முன் வைத்தும், கடந்த ஜூலை 28 அன்று, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது..

அதன் தொடர்ந்து இப்பொழுது ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும் போவதாக வெளியாகி உள்ள தகவல் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது..

விரைந்து ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அமல் படுத்த வேண்டும் என இந்து ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது..

#இந்துஆட்டோதொழிலாளர்முன்னணிசங்கம்

28/07/2026

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை.. ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..

அமைச்சரிடம் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மனு..

#இந்துஆட்டோதொழிலாளர்முன்னணிசங்கம்

ஆட்டோ டிரைவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபா மானியம்..மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.. அமைச்சரிடம் மனு...
28/07/2026

ஆட்டோ டிரைவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபா மானியம்..
மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.. அமைச்சரிடம் மனு..

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை சந்தித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக ஆந்திரா அரசாங்கம் ஆட்டோ டிரைவர்களுக்கு 15,000 ரூபாய் அரசு மானியம் வழங்குவது போல், தமிழகத்திலும் அதுபோல் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வருடத்திற்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபா மானியம் வழங்கக்கோரி வலியுறுத்தியும், 13 ஆண்டுகளாக மீட்டு கட்டணம் உயரவில்லை, அதை வலியுறுத்தி உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும்,
தவறும்பட்சத்தில் ஒரு லட்சம் ஆட்டோ தொழிலாளர்களை தமிழகத்தில் திரட்டி ஆர்ப்பாட்டமானது நடத்தப்படும் என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது..

ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நேரில் வழங்கி, அந்த நகலை மாண்புமிகு அமைச்சர் இடம் வழங்கப்பட்டது..

இதில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர், மாநில பொதுச் செயலாளர் வேலூர் மகேஷ், பொருளாளர் மூர்த்தி சேலம், கோட்டத் தலைவர் சந்தோஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

#இந்துஆட்டோதொழிலாளர்முன்னணிசங்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகரில் இன்று (09/07/2026) மாவட்டத் தலைவர் திரு.எம்.அருண் அவர்கள் தலைமையில்..இந்த...
09/07/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகரில் இன்று (09/07/2026) மாவட்டத் தலைவர் திரு.எம்.அருண் அவர்கள் தலைமையில்..

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாநிலத் தலைவர் திரு.மணலி மனோகரன் அவர்களது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்...

#இந்துஆட்டோதொழிலாளர்கள்முன்னணி

பள்ளி நிர்வாகம் அலட்சியம்.. அதிவேக வாகனம் இயக்கி, பள்ளி மாணவி மரணம்..திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகர் புனித அமல பள்...
03/07/2026

பள்ளி நிர்வாகம் அலட்சியம்..

அதிவேக வாகனம் இயக்கி, பள்ளி மாணவி மரணம்..

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகர் புனித அமல பள்ளியில், அனுமதியின்றி ஆம்னி வேன்களை இயக்கி பள்ளி மாணவிகளை ஏற்றி வந்தனர்..

இது கூறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் இந்து முன்னணி சார்பில் புகார் தெரிவித்தும் அலட்சியப்படுத்தியதால் அதிவேகமாக ஆம்னி வேன் இயக்கியதில், வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி மரமனடைந்துள்ளார்..

இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க, பள்ளி மாணவிகளை அனுமதி இன்றி இயங்கி வரும் வாகனங்களில் ஏற்றி வருவதை தடுத்து நிறுத்த கோரி, இந்து ஆட்டோ முன்னணி சார்பில் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..

 #இரங்கல்செய்திஇந்து ஆட்டோ முன்னணி, மாநில செயற்குழு உறுப்பினர், திரு. கற்குடி மணி அவர்கள் அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்....
15/06/2026

#இரங்கல்செய்தி

இந்து ஆட்டோ முன்னணி, மாநில செயற்குழு உறுப்பினர், திரு. கற்குடி மணி அவர்கள் அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்..

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல காசி விஸ்வநாதரை பிராத்திக்கின்றோம்..

#இந்துஆட்டோமுன்னணி #இந்துமுன்னணி

Address

3, Pallikooda Street , Koyambedu
Chennai
600107

Alerts

Be the first to know and let us send you an email when இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share