26/08/2019
எமது நாவிதன்வெளியில் மட்டுமல்லாது எமது கிழக்கிலங்கையில் கூட அல்-ஹிதாயா மஹா வித்தியாலயம் எனும் அத்தியாயத்தினை துவங்கி வைத்து பல நூறு சாதனைகளை பதிவு செய்ய வைத்து ஒரு ஆசானாய், ஒரு அதிபராய், ஒரு நல்ல தந்தையாய் எங்கள் அனைவருக்கும் அறிவு எனும் பானத்தை அருந்தச்செய்து அல்லும் பகலும் எமக்காய் பல தியாகங்களின் மத்தியில் எங்களையும் புத்திஜீவிகளாய் இந்த சமூகத்தில் வலம் வர வைத்த ஒரு அத்தியாயம் ஓய்வு பெற்றது ...
மதிப்புக்குரிய அல் ஹாஜ் எம்.எல்.ஏ.கையூம் அதிபர் அவர்கள் என்றுமே எங்கள் குடும்பத்தின் ஒருவரே.
கம்பீரமான குரலிலே காலை ஆராதனையிலே அவர் பேசுகையில் அவரின் அந்த காந்தப்பேச்சுக்கு எங்கள் அல்-ஹிதாயா வளாகத்தின் மரங்கள் கூட தலைசாய்த்து நிற்கும்.
வகுப்பறையில் எங்கோ இருந்து கேட்கும் அவரின் கர்சனை எங்கள் அடி வயிற்றை ஒரு கணம் பரீட்சித்துச்செல்லும்.
பரீட்சை முடிவுகளை அவர் ஆராய வரும் பொழுது அவரின் கண்டிப்பு அடுத்த பரீட்சையில் ஊக்கமாய் அமையும்.
சிறு நல்ல விடயம் கண்டால் வாழ்த்த மறந்ததுமில்லை,
சிறு கெட்ட விடயம் கண்டால் தண்டிக்க மறந்ததுமில்லை.
எங்கள் பிரதேசத்தின் நலனுக்காக மட்டுமல்லாமல் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் கூட கணிணி ஆய்வு கூடம் தொடக்கம் நவீன நூலகம் வரை அவரின் சேவைகள் அளப்பெரியது.
அவரின் சேவைகளோடும் அவரின் அரவணைபோடும் நாங்கள் வாழ்ந்த அந்த பாடசாலைக்காலங்கள் என்றும் எங்கள் அனைவரதும் மனங்களில் பசுமரத்து ஆணியாய் அகலா நினைவுளாய் தங்கி நிற்கும்.
பல அடுக்குமாடி கட்டடத்துடன் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கும் எங்கள் கலாசாலை அவரின் அர்ப்பனிப்பை மட்டுமல்ல எங்களுக்காக அவரின் அயரா உளைப்பையும் பறை சாற்றும்.
என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக உங்கள் கொளனிப்பிரதேச மாணவர்கள்.