FJ RENT A CAR

FJ RENT A CAR Government Registred Rent A Car Service

Reliable I Affordable I Hassle free
Daily | Weekly | Monthly Rentals

14/08/2026

இனி சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் வாகனம் கொடுப்பவர் கைது செய்யப்படுவார்!🚨

விபத்துக்கள் நேர்ந்தால் ஓட்டியவரைப்போல் வாகனம் கொடுத்தவருக்கும் அதே தண்டனை!

இலங்கை பொலிஸார் கடுமையான எச்சரிக்கை!

இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் அல்லது எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், உரிமம் இல்லாத நபர் மட்டுமன்றி, அவருக்கு வாகனத்தை வழங்கிய நபரும் சமமான குற்றவாளியாகவே கருதப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Traffic Act) படி, தகுந்த சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டக் கொடுப்பது பாரதூரமான குற்றமாகும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையில் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.

அத்தோடு, மிரிஸ்ஸ, வெலிகம, களுத்துறை மற்றும் ஹிக்கடுவ போன்ற சுற்றுலாப் பிரதேசங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் முறையான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், வாடிக்கையாளரின் ஓட்டுநர் உரிமத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே வாகனங்களை வழங்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்தினால், வாகனத்தின் உரிமையாளரும் அந்த விபத்துக்கான முழுப் பொறுப்பாளியாகக் கருதப்படுவார்.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது சேதங்களுக்கு வாகன உரிமையாளரும் சட்ட ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுடன், அவர்களது வாகன காப்புறுதி (Insurance) நன்மைகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இவை அனைத்தும் ஏலவே இருக்கும் சட்டங்கள்தான், ஆனால் இனி அவை கடுமையான முறையில் பாரபட்சமின்றி அமுல்படுத்தப்படும்!

எனவே, பொது மக்கள் தங்களது வாகனங்களை மற்றவர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

゚viralシ

🔴 வாடிக்கையாளரின் அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துங்கள். 🔴 பணம் பெறும்போது வங்கி கணக்கு அல்லது வங்கி அட்டை மூலமான பரி...
23/07/2026

🔴 வாடிக்கையாளரின் அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துங்கள்.

🔴 பணம் பெறும்போது வங்கி கணக்கு அல்லது வங்கி அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்குங்கள்.

🔴 அனைத்து வாகனங்களிலும் GPS கண்காணிப்பு வசதியை கட்டாயமாக பயன்படுத்துங்கள்.

1. வாடிக்கையாளரின் அடையாளத்தை சரிபார்க்கவும்

• தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தின் அசல் பிரதிகளைப் பரிசோதித்து, புகைப்படம் தெளிவாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

• நேரில் வந்துள்ள நபரும், ஆவணங்களில் உள்ள நபரும் ஒருவரே என்பதை உறுதி செய்யுங்கள். இதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட தெளிவான செல்ஃபி அல்லது முகப்புப் புகைப்படத்தைப் பதிவாக வைத்திருங்கள்.

• நிரந்தர முகவரியை உறுதிப்படுத்த மின்சார அல்லது நீர்க்கட்டண பில், அல்லது கிராம அலுவலர் வழங்கிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

• வழங்கப்பட்டுள்ள கைப்பேசி இலக்கத்திற்கு உடனடியாக அழைப்பு அல்லது OTP அனுப்பி, அது செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. தொழில்நுட்ப பாதுகாப்பு

• ஒவ்வொரு வாகனத்திலும் நம்பகமான GPS Tracking கருவியை பொருத்தி, அது எப்போதும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

• பணமாக (Cash) பெறுவதைத் தவிர்த்து, வாடிக்கையாளரின் பெயரில் உள்ள செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு, Credit/Debit Card அல்லது Bank Transfer மூலமாக மட்டுமே பணம் பெற்றுக்கொள்ளுங்கள்.

• வாகனம் ஒப்படைக்கும் மற்றும் மீளப் பெறும் இடங்களில் CCTV கேமராக்களை நிறுவி, அனைத்து வருகைகளையும் தெளிவாகப் பதிவுசெய்து பாதுகாத்து வைத்திருங்கள்.

3. சட்ட ரீதியான பாதுகாப்பு

• இரு தரப்பினரும் கையொப்பமிடும் சட்டபூர்வமான வாடகை ஒப்பந்தத்தை கட்டாயமாக மேற்கொள்ளுங்கள்.
• நீண்டகால வாடகைக்கு வழங்கும் போது, நம்பகமான மூன்றாம் தரப்பினரின் (Guarantor) உத்தரவாதம் மற்றும் முழு விவரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
• வாகனத்தைப் பெற்ற நபரைத் தவிர வேறு யாரும் அதை ஓட்டவோ, மீண்டும் வாடகைக்கு விடவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடுங்கள்.

4. சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள்

❗ வழக்கத்தை விட அதிக தொகை வழங்கி அவசரமாக வாகனத்தை கோருதல்.
❗ தனக்குச் சொந்தமில்லாத ஆவணங்கள் அல்லது பிறரின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துதல்.
❗GPS மற்றும் வாகன பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தேவையற்ற அளவில் அதிக ஆர்வம் காட்டுதல்.
❗இரவு நேரங்களில் மட்டுமே வாகனத்தைப் பெற முயற்சித்தல்.

சிறிய அலட்சியமே பெரிய இழப்புக்கு வழிவகுக்கும். பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் வாகனத்தையும், உங்கள் தொழிலையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்

19/07/2026

Sigiriya view was absolutely amazing… 🏰✨ One of the most beautiful places in Sri Lanka, where history, nature, and breathtaking views come together. A place that truly refreshes your mind and soul. 🇱🇰❤️ Keep travelling and keep creating beautiful memories.

17/07/2026

Top Places to Visit In Srilanka

COMING SOON…..🎉FJ RENT A CAR is getting ready to serve you with reliable, comfortable, and affordable vehicle rental ser...
17/07/2026

COMING SOON…..🎉

FJ RENT A CAR is getting ready to serve you with reliable, comfortable, and affordable vehicle rental services in Akkraipattu.

19/03/2026
14/01/2026

most beautiful place @ Pigeon Island and Trincomalee🎊🎉❣️

13/01/2026

veiw Highway

Address

Muathinar Road
Akkaraipattu

Telephone

+94741899417

Website

Alerts

Be the first to know and let us send you an email when FJ RENT A CAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share