We want "ஈரோடு - நாமக்கல் - அரியலூர்" புதிய ரயில் பாதை

  • Home
  • India
  • Namakkal
  • We want "ஈரோடு - நாமக்கல் - அரியலூர்" புதிய ரயில் பாதை

We want "ஈரோடு - நாமக்கல்  - அரியலூர்" புதிய ரயில் பாதை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We want "ஈரோடு - நாமக்கல் - அரியலூர்" புதிய ரயில் பாதை, Train station, Namakkal.

இந்த முகநூல் பக்கம் ஈரோடு - நாமக்கல் - அரியலூர் இடையே திருச்செங்கோடு, எருமப்பட்டி, தா.பேட்டை, துறையூர், பெரம்பலூர் வழியாக புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதும், தகவல் அளிப்பதும் முதன்மை நோக்கமாக கொண்டது.

🚂🛤️🙏*தமிழகத்தில் 19 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் மத்திய அரசு, அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் ப...
10/08/2026

🚂🛤️🙏*தமிழகத்தில் 19 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் மத்திய அரசு, அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்காமல் உள்ளது மத்திய மாவட்ட மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது!!!*

💢 கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் சர்வே பணிகள் துவங்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2025 இல் ரயில்வே துறை சார்பில் இந்த திட்டத்திற்கான DPR தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், மாநில அரசும் மத்திய நிதி துறையும் ஒப்புதல் வழங்கியதும் பணிகள் துவங்கப்படும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது!

✅ இந்நிலையில் சுமார் 116 கிமீ தொலைவுள்ள இந்த புதிய ரயில்பாதை அமைக்கப்படும் பொழுது பெரம்பலூர், துறையூர் போன்ற முக்கிய நகரங்கள் ரயில்சேவையை பெறுவதுடன், நாமக்கல், எருமப்பட்டி, தா.பெட்டை, அரியலூர் போன்ற பகுதிகளின் தொழில் வளர்ச்சி மேம்படும்! எதிர்காலத்தில், நாமக்கலில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீடித்து அமைக்கப்பட்டால் மேற்கு மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் மாற்று முக்கிய ரயில்பாதையாக அமையும்!

🤝 இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் கூட்டு முயற்சி செய்து, விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்! அதற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் முயற்சி எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று!!

PMO India Narendra Modi Ashwini Vaishnaw Nirmala Sitharaman Dr.L.Murugan K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar Ministry of Railways, Government of India

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🛤️🙏🚂 *அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி திட்டப்பணிகளை துவங்குமா மத்திய மாநி...
04/07/2026

🛤️🙏🚂 *அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி திட்டப்பணிகளை துவங்குமா மத்திய மாநில அரசுகள்! திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு!!!*

🧑‍🔧 *திட்டத்தின் தற்போதைய நிலை:-*

🚇 2018 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான சர்வே பணிகள் துவங்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2025 இல் ரயில்வே துறை சார்பில், அரியலூர் - நாமக்கல் இடையே பெரம்பலூர், துறையூர் வழியாக 116 KM க்கு புதிய ரயில் பாதை அமைக்க சர்வே பணிகள் முடிக்கப்பட்டு DPR (விரிவான திட்ட அறிக்கை) தயார்செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்த உடன் திட்டப்பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது!

🙏 *மத்திய மாநில அரசுகள் கூட்டு முயற்சியுடன் விரைந்து செயல்படுத்த வேண்டும்:-*

🤝 கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப்போல இந்த திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுத்து, விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்து நில எடுப்பு பணிகளை துவங்க வேண்டும்! மேலும், இந்த திட்டத்தை நாமக்கலில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீட்டித்து அமைக்க முதற்கட்ட சர்வே பணிகளை துவங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது!

👍 *திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு முதன்முறையாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் பாதை இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*பிற பகுதிகளில் இருந்து கோவை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எளிதாக வந்து செல்ல முடியும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

📍 *கோவை, ஈரோடு, நாமக்கலில் இருந்து பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் வழியாக சென்னை செல்ல மாற்று மற்றும் முக்கிய வழித்தடமாக இது அமையும்.

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்!!!

👉 *தயவுசெய்து இந்த சிறந்த திட்டத்தின் முக்கியத்துவம் கருதி மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வெண்டுதலாகும்!!!*

PMO India Narendra Modi Ashwini Vaishnaw Dr.L.Murugan VS Matheswaran Namakkal MP K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🛤️🙏🚂 *நமது ஈரோடு - நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் ரயில்வே த...
06/06/2026

🛤️🙏🚂 *நமது ஈரோடு - நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் ரயில்வே துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமா என ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு!!!*

🧑‍🔧 *திட்டத்தின் தற்போதைய நிலை:-*

🚇 தற்பொழுது அரியலூர் - நாமக்கல் இடையே பெரம்பலூர் துறையூர் வழியாக 116 KM க்கு புதிய ரயில் பாதை அமைக்க சர்வே பணிகள் முடிக்கப்பட்டு DPR (விரிவான திட்ட அறிக்கை) தயார்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது! இந்த திட்டத்தை திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும் என கடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு ஈரோடு MP .E.Prakash ஐயா அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்! நாமக்கல் MP க்களும், அமைச்சர்களும் வலியுறுத்தினால் இந்த திட்டம் செயலாக்கம் பெறும்!

👍 *திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு முதன்முறையாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*அரியலூர் - நாமக்கல் - ஈரோடு ரயில்பாதையானது கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பை வழங்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*பிற பகுதிகளில் இருந்து கோவை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எளிதாக வந்து செல்ல முடியும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

📍 *கோவை, ஈரோடு, நாமக்கலில் இருந்து பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் வழியாக சென்னை செல்ல புதிய வழித்தடமாக இது அமையும்.

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

👉 *தயவுசெய்து இந்த கொங்கு, மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் பயன்பெறும் இந்த சிறந்த திட்டத்தை மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வெண்டுதலாகும்!!!*

PMO India Narendra Modi Ashwini Vaishnaw VS Matheswaran Namakkal MP K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan Arunraaj KG

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

💢🛤️🙏🤝 *சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பை பெற்...
12/05/2026

💢🛤️🙏🤝 *சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கும் பொதுமக்கள் சார்பாக எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்! இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர் என நமது கனவு ரயில்பாதையான ஈரோடு - நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை திட்டம் தொடர்புடைய அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்! எனவே இப்பகுதி மக்களுக்கு நன்றிக்கடனாக அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த புதிதாக பதவியேற்றுள்ள மாநில அரசு ரயில்வே துறையுடன் இணைந்து நடவடிக்கை வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு!!*

🙏 தற்பொழுது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் Dr KG அருண்ராஜ் அவர்கள் அமைச்சராகவும், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. M. ரவிசங்கர் அவர்கள் துணை சபாநாயகராகவும் பதவியில் அமர்ந்திருப்பது, தமது பகுதியின் நலனுக்காக அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறது!

👍 *இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர் போன்ற நகர மக்களுக்கு முதன்முறையாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*அரியலூர் - நாமக்கல் ரயில்பாதை ஈரோடு வரை நீட்டிக்கப்பட்டால் கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

📍 *கோவை, ஈரோடு, நாமக்கலில் இருந்து பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் வழியாக சென்னை செல்ல புதிய வழித்தடமாக இது அமையும்.

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

👉 *தயவுசெய்து இந்த கொங்கு, மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் பயன்பெறும் இந்த சிறந்த திட்டத்தை மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வெண்டுதலாகும்!!!*

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

💢🛤️😍 *நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டம் (116KM) போல, முசிறி - சென்னை இடையே (350KM) புதிய ரயி...
28/04/2026

💢🛤️😍 *நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டம் (116KM) போல, முசிறி - சென்னை இடையே (350KM) புதிய ரயில்பாதை அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது! இந்த இரு திட்டங்களும் நிறைவேற்றப்படும் பொழுது நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் நகரங்கள் முக்கிய ரயில்வே சந்திப்புகளாக மாறும் வாய்ப்புள்ளது!!!*

🙏 நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போல, முசிறி - சென்னை இடையே துறையூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக புதிய ரயில்பாதை அமைக்க முதற்கட்ட சர்வே பணிகளுக்காக ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

👍 *இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர் போன்ற நகர மக்களுக்கு முதன்முறையாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*அரியலூர் - நாமக்கல் ரயில்பாதை ஈரோடு வரை நீட்டிக்கப்பட்டால் கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

📍 *நாமக்கலில் இருந்து பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, காஞ்சிபுரம் வழியாகவும், நாமக்கலில் இருந்து பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் வழியாகவும் இரு வழிகளில் சென்னை செல்ல புதிய வழித்தடம் அமையும்.

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

👉 தயவுசெய்து இந்த கொங்கு, மத்திய மற்றும் வட மாவட்ட மக்கள் பயன்பெறும் இந்த சிறந்த திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மத்திய மாநில அரசுகளும் முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டுகிறோம்!

Narendra Modi Nirmala Sitharaman Ashwini Vaishnaw Dr.L.Murugan K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🚇🛤️💪 * நமது We want "ஈரோடு - நாமக்கல்  - அரியலூர்" புதிய ரயில் பாதை முகநூல் பக்கத்தின் பின்தொடர்வோர் (followers) எண்ணிக்...
19/04/2026

🚇🛤️💪 * நமது We want "ஈரோடு - நாமக்கல் - அரியலூர்" புதிய ரயில் பாதை முகநூல் பக்கத்தின் பின்தொடர்வோர் (followers) எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளது. நமது பகுதியின் ரயில் போக்குவரத்து முன்னேற்றத்திற்காக ஒன்றுபட்டுள்ள தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! நம்மால் முடிந்தவரை இந்த திட்டத்தின் நன்மைகளையும், அவசியத்தையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என நம்புகிறோம்! இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் வரை தொடர்ந்து ஒற்றுமையுடன் குரல் கொடுப்போம்!*

🤝 *ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், தா.பேட்டை, துறையூர், பெரம்பலூர், அரியலூர் சுற்றுவட்டார பகுதி மக்களாகிய நாம் ஒன்றுபடுவோம்! விரைவில் வெற்றிபெறுவோம்! நமக்கான வெற்றிக் காலம் வெகுதூரமில்லை!!!*

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🤦🥹🛤️🚂 *நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டத்தின் Survey மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்கு ரூ.  2.9...
04/04/2026

🤦🥹🛤️🚂 *நமது அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டத்தின் Survey மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்கு ரூ. 2.90 கோடி தேவைப்படும் நிலையில் இந்த 2026-2027 நிதியாண்டிலும் வெறும் 16 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல், ஈரோடு பகுதிகளின் வளர்ச்சி மீதான மத்திய மாநில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அக்கறையின்மையின் வெளிப்பாடோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது! இத்திட்டம் தொடர்பான சர்வே பணிகள், 2018 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் 8 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் நிறைவுபெற்று ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்று!*

💸 *கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:-*

▪️ 2024 - 2025 • ரூ. 25 லட்சம்/-
▪️ 2025 - 2026 • ரூ. 16 லட்சம்/-
▪️ 2026 - 2027 • ரூ. 16 லட்சம்/-
இதுபோன்ற நிலை நீட்டித்தால் survey பணிகள் நிறைவடையவே இன்னும் 5-10 ஆண்டுகள் ஆகலாம்!

👎 *பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறைபாடு:-*

இப்பகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளில் 3 முறை (1999, 2004 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ . ராசா அவர்களும், 2009 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. காந்திச்செல்வன் அவர்களும்) மத்திய அமைச்சர்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியும்கூட இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்! தொடர்ந்து வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டுமென அரியலூர் - பெரம்பலூர் துறையூர் - நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கினரே தவிர இதுவரை இப்பகுதி மக்களின் நன்மை கருதி ரயில் இணைப்பை பெற்றுத்தரவில்லை என்பதே 100% கசப்பான உண்மை! மற்ற கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற புறக்கணிப்பு செய்ய ஒன்றுகூடும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு பெறவும், இந்த திட்டத்தை நாமக்கல் - ஈரோடு இடையே நீட்டித்து அமைக்கவும், ஒன்று சேர்ந்து ரயில்வே அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்தவும் மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கவும் ஒன்றுகூடி இதுநாள்வரை குரல் கொடுக்காதது மக்களுக்கு ஏமாற்றமே!!!

🤦 *மத்திய மாநில அரசுகளின் அக்கறையின்மை:-*

இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசும், திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், விரைவாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் ஒருமுறை கூட வலியுறுத்தாமல் மாநில அரசும் அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் பகுதி மக்களின் வளர்ச்சி மீது அக்கறையின்றி செய்யப்படுவதாகவே தோன்றுகிறது! கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தங்களின் பகுதி வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து ரயில்வே திட்டங்களை சிறப்பாக செயபடுத்தி மக்களுக்கு சிறந்த ரயில்வே போக்குவரத்து சேவையை வழங்குகின்றனர்! ஆனால் தமிழகத்தில், மாநில அரசு மத்திய அரசையும், மத்திய அரசு மாநில அரசையும் மாற்றி மாற்றி குறை கூறி தமிழக மக்களைத்தான் வஞ்சிக்கின்றனர்!

👆 *வாக்களித்தும் பயனில்லை:-*

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐஜேகே, கொமதேக, பாமக என அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பிட்ட அளவு மக்கள் நம்பி வாக்களித்து தான் வருகின்றனர்! எனினும் வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் கட்சிகள் செயல்படவில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை! எங்களுக்கான அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றாத கட்சிகளுக்கு இனி எங்களது வாக்குகளும் கிடையாது!*

👍 *இந்த திட்டத்தின் முக்கியத்துவமும் நன்மையும்:-*

📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு புதிதாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

💢 *இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற இப்பொழுதேனும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து பெற்றுத்தர வேண்டும் என்பதும், மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயப்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது!!!*

PMO India Narendra Modi Nirmala Sitharaman Ashwini Vaishnaw Dr.L.Murugan K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar Ministry of Railways, Government of India

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🥹🛤️🙏 *பெரம்பலூர், துறையூர் பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளில் 2 முறை (1999, 2004 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திர...
03/04/2026

🥹🛤️🙏 *பெரம்பலூர், துறையூர் பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளில் 2 முறை (1999, 2004 - மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ . ராசா அவர்கள்) மத்திய அமைச்சரை பாராளுமன்றத்திற்கு வழங்கியும்கூட தமிழகத்தில் ரயில் சேவை இணைப்பு இல்லாத நகரங்களாக பெரம்பலூரும், துறையூரும் விளங்குவது வேதனைக்குரிய விஷயம்! தொடர்ந்து வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டுமென அரியலூர் - பெரம்பலூர் துறையூர் - நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கினரே தவிர இதுவரை இப்பகுதி மக்களின் நன்மை கருதி ரயில் இணைப்பை பெற்றுத்தரவில்லை என்பதே 100% கசப்பான உண்மை! எங்களுக்கான அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றாத கட்சிகளுக்கு இனி எங்களது வாக்குகளும் கிடையாது!*

🙏 நாடாளுமன்ற புறக்கணிப்பு செய்ய ஒன்றுகூடும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு பெறவும், இந்த திட்டத்தை நாமக்கல் - ஈரோடு இடையே நீட்டித்து அமைக்கவும், ஒன்று சேர்ந்து ரயில்வே அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்தவும் மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கவும் ஒன்றுகூடி குரல் கொடுக்காதது ஏனோ?

👍 *இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு புதிதாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

💢 *இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து பெற்றுத்தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது!!!*

K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

🥹🛤️🙏 *திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூட இடம் பெறாத அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டம்!!...
29/03/2026

🥹🛤️🙏 *திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூட இடம் பெறாத அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டம்!!! தமிழகத்தில் ரயில் சேவை இணைப்பு இல்லாத மாவட்ட தலைநகரங்களில் ஒன்றான பெரம்பலூருக்கும், துறையூர், திருச்செங்கோடு நகர பகுதி மக்களுக்கும் ரயில் இணைப்பு கிடைப்பது எப்பொழுது? அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு பகுதி மக்களின் வளர்ச்சிக்காக அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் - ஈரோடு புதிய ரயில்பாதை திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு இதுவரை மத்திய அரசிடம் வலியுறுத்தாதது வருத்தமளிக்கிறது!!!*

🙏 இந்த அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு பெறவும், இந்த திட்டத்தை நாமக்கல் - ஈரோடு இடையே நீட்டித்து அமைக்கவும் மாண்புமிகு சிதம்பரம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து ரயில்வே அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்பதும் மாநில அரசு சார்பில் வலியுறுத்த வேண்டும் என்பதே மத்திய மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு!

👍 *இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-*

📍 *பெரம்பலூர், துறையூர், திருச்செங்கோடு போன்ற நகர மக்களுக்கு புதிதாக ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்!*

📍*கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கலில் இருந்து கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்!*

📍*ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற நகரங்களின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சி அடையும்!*

📍*ஜவுளி பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், சிமெண்ட், வெங்காயம் போன்ற விவசாய பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விரைவாக விற்பனை இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியும்!*

🙏மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி (துறையூர் பகுதி), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். மேலும் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பலமடங்கு உயரும்!!!

K.N. ARUN NEHRU Thol.Thirumavalavan VS Matheswaran Namakkal MP KRN Rajeshkumar

#அரியலூர் #அரியலூர்மாவட்டம் #பெரம்பலூர் #துறையூர் #நாமக்கல் #நாமக்கல்மாவட்டம் #திருச்செங்கோடு #ஈரோடு

Address

Namakkal
637001

Website

Alerts

Be the first to know and let us send you an email when We want "ஈரோடு - நாமக்கல் - அரியலூர்" புதிய ரயில் பாதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category